செய்திகள் :

டிமாண்ட் ஏற்றும் தேமுதிக டு ஆளுங்கட்சியிடமே கறந்த இலைக்கட்சி மா‌.செ! - கழுகார் அப்டேட்ஸ்

post image

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பாக, தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தே.மு.தி.க கலந்துக்கொண்டதுதான் அனைத்து தரப்பிலும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. இதுவரை தங்களின் கூட்டணி நிலைப்பாட்டினை அறிவிக்காத தே.மு.தி.க., தி.மு.க-வுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தாலும், வழக்கம்போல அ.தி.மு.க உள்ளிட்ட பிற கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுதான் வந்ததாம். தற்போது தி.மு.க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதன் மூலம், தங்களின் தேர்தல் கூட்டணி டிமாண்டை இன்னும் கொஞ்சம் அதிகமாக ஏற்றிக்கொள்ள தே.மு.தி.க முயல்வதாகச் சொல்கிறார்கள் விவரப் புள்ளிகள்.

இதனால், 'தே.மு.தி.க-வை எப்படி நம் பக்கம் இழுப்பது..?' என்று, தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறதாம் அ.தி.மு.க தலைமை!

ஜில் மாவட்ட இலைக் கட்சியில், மாவட்டச் செயலாளர் நாற்காலியை வருடக்கணக்கில் வைத்திருக்கும் 'விநோத' புள்ளியின்மீது, புது மாதிரியான வசூல் விவகாரம் வெடித்திருக்கிறது. அம்மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரம் செலுத்தி, ஊழலில் கொழித்துவரும் ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளின் பட்டியலைக் கையில் எடுத்திருக்கிறாராம் 'விநோத' புள்ளி. 'அந்த ஆதாரங்களை வைத்து வழக்குப் போடுவார்...' என்று பல தரப்பினரும் எதிர்பார்த்த வேளையில், ஊழலில் ஈடுபட்டவர்களிடமே வேறு வகையில் பேசி டீல் முடித்திருக்கிறாராம் 'விநோத' புள்ளி. தங்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதைப் பார்த்துப் பதறிப்போன ஆளுங்கட்சிப் புள்ளிகள், 'விநோத' புள்ளியின் வாயை அடைக்க 30 லட்டுகளை திணித்திருக்கிறார்களாம். 'ஆளுங்கட்சி நிர்வாகிகளிடமே கறந்துவிட்டாரே...' என்று வாயைப் பிளக்கிறார்கள் இலைக் கட்சி நிர்வாகிகள்!

உப்பு மாவட்டத்தின் கதர்க் கட்சி எம்.எல்.ஏ., தொகுதிப் பக்கம் பெரிதாகத் தலைக்காட்டாமல், சென்னையிலேயே முகாமிட்டுத் தொழிலை கவனித்துவருகிறாராம். போதாக்குறைக்கு, 'சொந்தக் கட்சியின் சீனியர் நிர்வாகிகளை மதிப்பதில்லை' என்ற குற்றச்சாட்டும் அவர்மீது ஓங்கி ஒலிக்கிறது. இந்தநிலையில், எம்.எல்.ஏ-வின் செயல்பாட்டில் அதிருப்தியான நிர்வாகிகள் தனியாகக் கூட்டம் கூட்டி, 'வரும் தேர்தலில் அவருக்கு இந்தத் தொகுதியில் சீட் கொடுக்கக் கூடாது' என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதை மாநிலத் தலைமையிடமும் பேச ஆயத்தமாகியிருக்கிறார்கள். இதை எப்படியோ அறிந்த எம்.எல்.ஏ., அதிருப்தி நிர்வாகிகளை அழைத்து கரன்சிகளை வாரி இறைத்திருக்கிறாராம். அதில் திளைத்த அதிருப்தி நிர்வாகிகள், 'அவரைபோல ஆளே இல்லை...' என்று புகழ்பாட ஆரம்பித்திருப்பதால், உப்பு மாவட்டக் கதர்க் கட்சியில் திருவிழா நடக்கிறது!

தலைநகர் காக்கித் துறையில், முக்கியமான பிரிவில் பணியாற்றும் 'செல்வ'மான அதிகாரி ஒருவர், வார இறுதி நாள்களில் டூயூட்டியில் இருக்கும்போதே தள்ளாடித் தள்ளாடித்தான் அலுவலகம் வருகிறாராம். இதனால், அவர் அறைக்கு தர்மசங்கடத்துடனேயேதான் சென்றுவருகிறார்களாம் காக்கிகள். கடந்த வாரத்தில்கூட, தள்ளாட்டம் ஓவராகி மேஜையிலிருந்த பொருள்களை வீசியெறிந்து அட்ராசிட்டி செய்திருக்கிறார் அவர். கடலோர வெள்ளை மாளிகைக்குப் புகார் பறக்கவும், 'செல்வ' அதிகாரி குறித்து விசாரணை நடந்திருக்கிறது. விசாரணையில், 'பல்வேறு மாவட்டங்களில் உயரதிகாரியாக இருந்தபோதே சர்ச்சையில் சிக்கியவர்தான் அவர். 'கோட்டை' மாவட்ட அ.தி.மு.க மாஜியின் செல்லப்பிள்ளையாக இருந்தவர். இதுபோன்ற தள்ளாட்டச் சர்சைகளில் சிக்குவதால்தான், மீண்டும் மீண்டும் சட்டம் ஒழுங்கு இல்லாத பணிக்கு அவர் மாற்றப்பட்டார். அப்போதும்கூட அவர் திருந்தவில்லை' என்று தெரியவந்ததாம். இதனால், அவரைத் தற்போதிருக்கும் பதவியிலிருந்து தூக்கியடிக்க தயாராகிறார்களாம் உயரதிகாரிகள்!

அ.தி.மு.க-வில் பூத் கமிட்டியை வலுப்படுத்தவதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா மூன்று பொறுப்பாளர்களைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நியமித்திருந்தது அக்கட்சித் தலைமை. அதன்படி, ஒதுக்கப்பட்ட மாவட்டத்துக்கு நேரடியாகச் சென்று, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்குப் பயிற்சி கொடுக்க ஆயத்தமாகியிருக்கிறார்கள் பொறுப்பாளர்கள். ஆனால், பல மாவட்டங்களில் பூத் கமிட்டியே அமைக்கப்படவில்லை என்பதை கண்டு அதிர்ச்சியாகியிருக்கிறார்கள் பொறுப்பாளர்கள். இது குறித்து 'தலைமையிடம் தெரியப்படுத்திவிடக் கூடாது... தெரிஞ்சா அவ்வளவுதான்...' என்று பொறுப்பாளர்களை மிரட்டியிருக்கிறார்களாம் சில மா.செ-க்கள். குறிப்பாக, தலைநகரிலுள்ள சில மாவட்டச் செயலாளர்கள் கடுமையான வார்த்தைகளால் மிரட்டியிருக்கிறார்களாம். இந்த அடாவடிகளை, பொறுப்பாளர்கள் சிலர் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கும் நிலையில், அது குறித்து விரைவிலேயே விசாரணை நடைபெறலாம் என்கிறது எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரம்!

மீண்டும்... மீண்டும்...

கோவை மாவட்டத்தில் நடந்த கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் சம்பவம் பெரிய அதிர்ச்சியை கிளப்பியது.

அதன் அதிர்வுகள் முழுமையாக அடங்கும் முன்பே இப்போது ஒரு சம்பவம். இப்போது என்று கூறுவதை விட, தொடர்ந்து என்று கூறுவது சரியாக இருக்கும்.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விகடன் ஒரு முன்னெடுப்பை எடுக்கிறது.

அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு இங்கே ஒரு சர்வே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு நீங்கள் பகிரும் பதில்கள் மிக முக்கியமானது. உங்களின் தனிப்பட்ட அடையாளம் பாதுகாக்கப்படும்.

` நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும்' - மகனை முதல்வராக்க பீகார் மக்களிடம் லாலு கோரிக்கை

243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் இன்று முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 11-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.இதில், தே... மேலும் பார்க்க

பாமக: "அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம்; பெயரையும் நானே சொல்கிறேன்" - ராமதாஸ்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா கட்சிகளும் தேர்தல் வியூகங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரமாகியிருக்கின்றன.ஆனால், பாமக இன்னும் உட்கட்சி மோதலில் இருந்தே மீளமுடியாமல் த... மேலும் பார்க்க

'2 மணி நேரத்துக்கு மேல் கூட்டம் காத்திருந்தால்...' - அரசியல் கட்சிகளின் பரப்புரை நெறிமுறைகள்!

அரசியல் கட்சிகளின் பரப்புரை கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சமர்பிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா... மேலும் பார்க்க

"கூட்டணி வச்சதுதான் விஜயகாந்த் செய்த தவறு" - சீமான் கூறுவதென்ன?

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி பேரங்கள், கட்சித் தாவல்கள், அரசியல் வியூகங்கள், சர்ச்சைகள், அதிகாரப்போட்டிகள் எல்லாம் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன. 'INDIA' கூட்டணி, 'NDA' கூட்டணி என... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: 121 தொகுதிகள்; 1,314 வேட்பாளர்கள்; நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்?

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படிடையில் முதற்கட்ட வாக்குபதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.121 தொகுதிக்கான சட்டமன்றத் தேர... மேலும் பார்க்க