செய்திகள் :

`தங்கம் பெட்டியில் இருப்பது போன்று பெண்கள் வீட்டில்.!' - இஸ்லாமிய மத குரு கருத்தால் சர்ச்சை

post image

கேரளாவின் இஸ்லாமிய மதகுருவான கிராண்ட் முஃப்தி ஷேக் அபுபக்கர் அஹ்மத், கொச்சியில் நடந்த ஒரு இஸ்லாமிய மத மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில், ``பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும்" என்று தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

கொச்சியில் நடைபெற்ற ஹப்புல் ரசூல் முஸ்லிம் மாநாட்டில் பேசிய மதகுரு அபுபக்கர், ''பெண்கள் தங்க ஆபரணங்களை போன்றவர்கள். எனவே பெண்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். பொது வெளியில் நுழையக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இது பெண்களை குறைக்கும் நோக்கம் கிடையாது. அவர்களை கவுரவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தான். உதாரணமாக, நகைக் கடையில் ஒரு நபர் தங்க நகையை வாங்கியதை மேற்கோள் காட்டி பேசினார். ஒருவர் நெக்லஸ் வாங்க கடைக்கு சென்றால், நெக்லஸ் ஒரு அலமாரியில் இருந்து கவனமாக வெளியே எடுக்கப்பட்டு பின்னர் உள்ளே இருக்கும் ஒரு பெட்டியை திறந்து அதில் இருந்து கவனமாக எடுக்கப்பட்டு அது வாடிக்கையாளர்களுக்கு காட்டப்படுகிறது" என்றார்.

`பெண் வெளியில் வந்தால் அழிவுக்கு வழிவகுக்கும்'

இதே போன்று பக்கத்து கடையில் கல் கிரைண்டர்களை விற்கும் கடையில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்டினார். மக்கள் நடந்து சென்றாலும், கல் மீது கால் வைத்தாலும் சாலையோரம் வைத்துக்கொள்ளலாம்.

தங்க நகையை சாலையோரத்தில் விட்டுச் செல்வதால், அவ்வழியே செல்லும் அனைவரும் அதைத் தொடக்கூடும். இறுதியில் அதன் அழகையும் மதிப்பையும் அழித்துவிடும். எனவே நகையை அதன் அழகை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதை ஒரு பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பெண்களை இப்படி பொது வெளியில் கொண்டு வந்தால் அது பெரும் அழிவுக்கு வழிவகுக்கும்.

அதனால்தான் இஸ்லாம் பெண்களுக்கு பர்தா முறையை வகுத்தது. மார்க்க அறிஞர்கள் 100 ஆண்டுகளாக இந்த நிலைப்பாட்டை போதித்துள்ளதாகவும், இதன் மூலம் நாட்டில் உள்ள பெண்கள் தங்கள் கண்ணியத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது'' என்றும் கூறினார்.

பர்தா பெண்களுக்கு கவுரவம்

முன்னதாக இதே உரையில், ``இஸ்லாம் வரலாற்றில் பெண்களின் நிலையை உயர்த்தியுள்ளது" என்று காந்தபுரம் தெரிவித்தார். இஸ்லாமுக்கு முந்தைய அரேபியாவில் பெண் சிசுக்கொலை நடைமுறையில் இருந்ததைக் குறிப்பிட்டு, பெண் குழந்தைகளைக் கொல்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார். பெண்களுக்கு வாரிசுரிமை இல்லாத நேரத்தில் இஸ்லாம் சொத்துரிமையை வழங்கியது. இஸ்லாம் பெண்களுக்கு ஒரு பெரிய பதவியை வழங்கியது. பெண்கள் பொது வெளியில் நுழைவதற்கான கட்டுப்பாடுகளையும் அவர்கள் மீதான மரியாதையின் வடிவமாக பார்க்க வேண்டும்.

மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்களின் நடைமுறைகளில் தனது அமைப்பு தலையிடாது. முஸ்லிம் மத அறிஞர்களும் தங்கள் சமூகத்தில் உரையாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்துடன் பேசுவதற்கு எமக்கு உரிமை உண்டு. அதனைத் தொடர்ந்து செய்வோம். இங்குள்ள எவராலும் அதனைத் தடுக்க முடியாது. நாங்கள் மார்க்கத்தைப் படித்திருக்கிறோம். எனவே, இதைச் சொல்வது நமது கடமை. அதைச் சொல்வோம், தொடர்ந்து சொல்வோம். இதை யாராலும் தடுக்க முடியாது" என்று அவர் கூறினார்.

இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வருங்கால மனைவிக்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிய இளைஞர் - ராசிபுரம் ஆச்சர்யம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் அசோக் சரவணன் (வயது: 32). பொறியியல் பட்டதாரியான இவருக்கும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்கிற வர்ஷினிக்கும் வரும் செப்டம்பர் 17... மேலும் பார்க்க

`எதை வேண்டுமானாலும் செய்ய நீங்கள் என்ன கடவுளா?' மகா., உணவுத்துறை அதிகாரி துகாராமுக்கு ஐகோர்ட் கேள்வி

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் கமிஷனராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் எடுத்து வரும் நடவடிக்கைகளால் உணவகங்கள், உணவுப்பொருள், மருந்... மேலும் பார்க்க

நேபாள வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாதுகாப்பு பெட்டகம் - ரூ.92 லட்சத்தை திருடிய 29 பேர் கைது

நேபாளத்தில் பனிப்பாறை உடைந்து மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐ தாண்டிவிட்டது. இது தவிர 320 இந்தியர்கள் உட்பட 2500 பேரைக்... மேலும் பார்க்க

16 வயதில் AI நிறுவனம்; அப்பாவுக்கே மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்! - யார் இந்த ‘AI Kid of India?'

ஒரு பக்கம் 12-ஆம் வகுப்புப் படிப்பு... இன்னொரு பக்கம் AI நிறுவனம், புதிய தொழில்நுட்பக் கருவிகள், உலகம் முழுவதும் பயிற்சி என பிஸியாக இயங்கி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த 16 வயது மாணவன் ராவுல் ஜான் அஜூ. A... மேலும் பார்க்க

40 ஆண்டுகள் தலைமறைவு: பரோலில் தப்பி, சிறந்த ஆசிரியரான ஆயுள் தண்டனைக் கைதி, மீண்டும் கைது!

`சட்டம் தன் கடமையைச் செய்யும், ஆனால் சில நேரங்களில் அது தூங்கிவிடும்; எனினும் இறுதியில் விழித்துக்கொள்ளும்' என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. ஆயுள் தண்டனை பெற்ற ஒரு கொலைக் குற்றவாளி, பரோலில் வெளியே வ... மேலும் பார்க்க

"ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் மராத்தி கற்க ஒரு வருடம் அவகாசம்" - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்கவேண்டும் என்றும், மராத்தி தெரியாத ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில போக்குவரத்து துறை அறிவித்தது. அத... மேலும் பார்க்க