செய்திகள் :

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

post image

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்டி வந்தார்.

இதனால் தனது வீட்டைவிட்டு வெளியேறிய ஜாபர் பட்டேல் புனேயில் உள்ள தனது மகள் வீட்டில் குடியேறினார். அங்கு இருந்து கொண்டு தனது மகனை வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறி போலீஸில் புகார் செய்தார். அதோடு இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் ஜாபருக்கு ஆதரவாக கோர்ட் தீர்ப்பளித்தது. வீட்டை ஜாபர் பட்டேல் பெயருக்கு மாற்றவேண்டும் என்றும், அவரது மகன் அப்துல் ரஹ்மான் வீட்டைக் காலி செய்து தந்தையிடம் வீட்டை ஒப்படைக்கும்படியும் கோர்ட் உத்தரவிட்டது.

கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து வீட்டிற்கு ஜாபர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அந்நேரம் ஆட்டோவை நடுரோட்டில் அப்துல் ரஹ்மான் வழிமறித்தார். ஆட்டோவிற்குள் இருந்த தனது தந்தையை பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் குத்தினார்.

இதில் ஜாபருடன் பயணம் செய்த அவரது மகளும் காயம் அடைந்தார். இருவரும் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இதில் ஜாபர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்துல் ரஹ்மானைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க

டி.எஸ்.பி உடையில் அலறவிட்ட பெண்; ஆண் நண்பரை `இம்ப்ரஸ்’ செய்ய தில்லாலங்கடி! - சிக்கியது எப்படி?

வேலூர் கோட்டை வளாகத்தில், நேற்று முன்தினம் மாலை வடக்கு காவல் நிலையப் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதில்சுவர் நடைபாதை பகுதியில் `டி.எஸ்.பி சீருடை’யில் பெண் ஒருவர் பிறந்த நாள் கேக்... மேலும் பார்க்க

சபரிமலை: தடிமனாகப் பூசிய தங்கத்தைத் திருடிவிட்டு மெலிதாகப் பூசி மோசடி; ஆய்வக சோதனையில் அதிர்ச்சி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம் மற்றும் கருவறை திருக்கதவுகள் ஆகியவற்றில் தங்கம் பதித்ததில் நடந்த மோசடி குறித்த விசாரணை தொடர்ந்து வருகிறது. ​சபரிமலை கருவறை மற்றும் அதன் இருபுறமும் ... மேலும் பார்க்க