செய்திகள் :

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்ட கணவர்; விபரீத முடிவெடுத்த மனைவி - திருவாரூரில் அதிர்ச்சி

post image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கரும்பியூர் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (31) இவரது மனைவி காயத்ரி(24). இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை, இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

பிரவீன் நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சையில் கணவர்

இதனால் பிரவீன் மன உளைச்சலுக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மனைவி மீது கோபமாக வெளியே சென்ற பிரவீன் எலி மருந்து வாங்கியுள்ளார். பின்னர், மேட்டுப்பாளையம் பகுதியில் மைலி அம்மன் கோவில் அருகே எலி மருந்தை தின்றுள்ளார். இதையடுத்து மொபைல் ஆப் மூலம் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ரெடி செய்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதை தன்னுடைய வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார்.

இதைபார்த்த அவரது மனைவி காயத்ரி அதிர்ச்சியடைந்து தனது கணவர் இறந்து விட்டதாக நினைத்து விட்டார். பின்னர் கணவர் இறப்பை தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்ட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் எலி பேஸ்டை தின்றதால் மயக்கம் போட்டு கிடந்த பிரவீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை தடுப்பு மையம்

மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்ட தகவல் பிரவீனுக்கு தெரிந்து விட்ட நிலையில் அவர் கதறி அழுதிருக்கிறார். கணவர் இறந்து விட்டதாக நினைத்து மனைவி விபரீத முடிவை எடுத்து விட்டார். ஒருவருக்கொருவர், கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும் அன்பு வைத்திருப்பதை இவை காட்டுகிறது. ஆனால் விட்டு கொடுத்து செல்லாத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்கிறார்கள்.

அம்மா இல்லாமல் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்வி குறியாக அமைந்து விடும் என்பது தான் கவலைக்குறியது. இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் - பணம் தராததால் வெறிச்செயல்!

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65) கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களுக்கு மேனகா(38), மௌனிகா(25) என இரண்டு மகள்கள். மேனகா திருமணமானவர். கருத்துவேறுபாட்டால் ... மேலும் பார்க்க

குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது. இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் ... மேலும் பார்க்க

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க

`நாலாவது குழந்தைய எப்படி வளர்க்க போறீங்க? பேசாம வித்துடலாம்' - காரைக்குடியை உலுக்கிய குழந்தை விற்பனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்றபோது வாக்குவாதம்; நடுரோட்டில் மனைவியை சுட்டுத் தள்ளிவிட்டு சென்ற டெல்லி போலீஸ்காரர்

டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொ... மேலும் பார்க்க

சேலம்: மூடியிருந்த அம்பேத்கர் சிலையைத் திறந்த நபர்கள்; கல்வீச்சு, தடியடி என விடியவிடிய வன்முறை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க