'லட்சக்கணக்கில் முறைகேடு அம்பலம்? கிராமசபை கூட்டத்தில் கேள்விகளால் துளைத்த மக்கள...
தனது Instagram பக்கத்தை நீக்கினாரா Virat Kohli? அனுஷ்காவை டேக் செய்து கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
ஆசிய விளையாட்டு வீரர்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்டவர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. 274 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டவர்.
இந்த நிலையில், இன்று திடீரென அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 124 ரன்கள் குவித்து, சமீபத்தில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருந்தார் விராட் கோலி.
இந்த நேரத்தில், இன்ஸ்டாகிராம் பக்கம் செயலிழந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, விராட் கோலி ரசிகர்கள் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவை டேக் செய்து விவரங்களைக் கேட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர், தனியே நடந்து சென்ற நிஹிலிஸ்ட் பெங்குயின் படத்துடன் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கப் படத்தையும் இணைத்து, `விராட் சமூக ஊடகங்களிலிருந்து விலக முடிவெடுத்திருக்கிறாரா?' என மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், விராட் கோலியே இந்தக் கணக்கை நீக்கினாரா அல்லது வேறு ஏதும் தொழிற்நுட்பப் பிரச்னையா என்பது குறித்து விவரம் தெரியவில்லை. விராட் கோலி தன் எக்ஸ் பக்கத்திலோ அல்லது அனுஷ்கா ஷர்மா தன் சமூக ஊடகப் பக்கங்களில் இதுகுறித்து விளக்கமளிக்கும்வரை பல்வேறு ஊகங்கள் வந்துகொண்டே இருக்கும்.

















