செய்திகள் :

தமிழர்கள் மீது நடத்தப்பட்டது போலி என்கவுண்டர்தான் - அதிர்ச்சி அளிக்கும் உடற்கூறாய்வு அறிக்கை!

post image

"மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது போலி என்கவுண்டர்தான்" என்பதை உடற்கூறாய்வு அறிக்கை தெரிவிப்பதாக, கர்நாடக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனுர் தாலுகாவில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். வனப்பகுதியில் மேயச்சென்ற மாடுகள் காணாமல் போனதால் தேடிச்சென்ற அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், டேவிட் குமார், மகிமைதாஸ் ஆகியோர் மீது வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காயத்தோடு மகிமைதாஸ் தப்பி ஓடிவிட மற்ற மூவரும் உயிரிழந்தார்கள்.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மான் வேட்டையாட வந்தவர்களுடன் நடந்த மோதலில், தற்காப்புக்காக தூரத்திலிருந்து சுட்டதாக வனத்துறையினர் கூறினர்.

உடற்கூறாய்வு அறிக்கை நகல்

"இது மோசமான சம்பவம், அப்பாவிகளை வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்" என்று, அங்கு வசிக்கும் மக்களும், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட கன்னட அமைப்பினரும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினார்கள்.

இந்த நிலையில் மைசூர் அரசு மருத்துவமனையில் கடந்த 16 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கையிலுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், கொல்லப்பட்ட மூன்று பேரும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்தே சுடப்பட்டுள்ளனர் என்றும், ஜான்ரோஸ் பீட்டரின் இடது காது பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செண்டி மீட்டர் நீளத்திற்கு ஆழமான கடுமையான காயம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காப்புக்காக தூரத்திலிருந்து சுட்டதாக வனத்துறையினர் கூறி வந்த நிலையில், உடற்கூறாய்வு அறிக்கை அதற்கு மாறாக உள்ளது.

இந்த தகவல் கொல்லப்பட்டவர்களின் ஊர் மக்களையும், கர்நாடக மாநில விவசாயிகளையும், எதிர்க்கட்சிகளையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

மூன்று தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு

"இது அப்பட்டமான போலி என்கவுண்டர், இந்த வழக்கை கர்நாடக போலீஸ் விசாரித்தால் உண்மை வெளிவராது, சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்" என்று கர்நாடக மாநில பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க