``நிதிஷ் கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் நான் அரசியலை விட்டே போகிறேன்" ...
தமிழிசை: "விஜய்க்கு இந்த புத்தகத்தை அனுப்பியிருக்கிறேன்" - SIR விவகராத்தில் விளக்கம்
முன்னாள் ஆளுநரும் தமிழக பா.ஜ.க -வின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று (நவ. 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரலெழுப்புவது தேவையற்றது என்ற ரீதியில் பேசினார்.
"தொடர்ந்து SIR என்கின்ற வாக்காளர் தீவிர சீர்த்திருத்த இயக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த கட்சிகள் எதிர்த்து வருகின்றன. தம்பி விஜய் அவர்களின் கட்சி 16 ஆம் தேதி இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள் என்று அறிவித்திருக்கிறார்கள். இது வேண்டாத ஒன்று.

உங்களோட பிஎல்ஏ2 தான் உங்க கூட பணியாற்ற போறாங்க, உங்களோட தொண்டர்கள் தான் பணியாற்ற போறாங்க, எங்க கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த தொண்டர்களும் எல்லாரும்தான் தேர்தல் ஆணையத்திற்கு உதவியாக பணியாற்ற போறாங்க. வெளிப்படையாக செய்யப்படுகிற இதற்கு எதிராக ஏன் ஆர்ப்பாட்டம்?
ஆர்ப்பாட்டம் செய்ற சக்தியை இந்தப் பணியைத் துரிதமாக நடத்துவதற்கு செலவழித்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும். ஏற்கெனவே 6.5 கோடி வாக்காளர்களில் 5 கோடி பேருக்கு அதற்கான படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. வாங்கி வைக்கறதுக்கு பதிலா அவங்க இருக்கும்போதே பூர்த்தி செய்து கொடுத்துருங்கன்னு நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். அதைப் பூர்த்தி செய்வது எல்லாமே இலகுவாதான் இருக்கு.
நான் இன்னைக்கு தம்பி விஜய் அவர்களுக்கு இதை (வாக்காளர் சீர்திருத்தம் பற்றிய புத்தகம்) போஸ்ட்ல அனுப்பலாம்னு இருக்கேன். SIRல் ஒண்ணுமே இல்ல, மக்களுக்காக நம்ம உதவிதான் செய்யணும். ஏன் போராட்டம் செய்யணும்? திமுக அரசியலுக்காக போராட்டம் செய்து, நீங்க புதுக்கட்சி, SIR உங்களுக்கு இன்னும் உறுதுணையா இருக்கும். போலி வாக்காளர்கள் இல்லாம முதல் தேர்தலை நீங்க சந்திக்கப் போறீங்க.

இன்னைக்கு பீகார்ல ஏன் எல்லா தேர்தலையும்விட வாக்கு சதவிகிதம் அதிகரிச்சிருக்கு? பெண்கள் 10 சதவிகிதத்திற்கு மேல அதிகமா ஓட்டு போட்டுருக்காங்க. ஏன்னா போலி வாக்காளர்கள் வந்து பூத் கேப்சரிங் பண்ண மாட்டாங்க, கலாட்டா பண்ண மாட்டாங்க, வர்றவங்க எல்லாம் நம்மை மாதிரி நேர்மையாளர்கள். அதனால நம்ம தைரியமா போய் ஓட்டு போடலாம்னு அதிகப்படியான மக்கள் வந்திருக்கிறார்கள்.
65 லட்சம் பேரை நீக்கியிருந்தால் அவர்கள் எல்லாம் சாலைக்கு வந்திருப்பார்கள். ஆனால், எல்லாரும் அமைதியா வந்து இதற்கு முன்னால் இருந்ததைவிட 10% அதிகமாக வாக்களித்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்திருப்பதை இது காட்டுகிறது. அதே நம்பிக்கையோடு தமிழ்நாட்டில் மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.
முறைகேடாக வாக்குகளைப் பதிய வைத்து, அதன் மூலம் வெற்றி பெறுபவர்கள் தான் பதறுகிறார்கள். ஆனா இன்னைக்கு நிச்சயமாக இந்த வாக்காளர் சேர்ப்பு முகாம், தீவிர பரிசீலனை முகாம் சிறப்பாக நடைபெற்றது என்றால், தமிழக மக்கள் பலன் பெறுவார்கள், பயன் பெறுவார்கள்!
30 நாட்களுக்குள் எப்படி செய்ய முடியும்னு கேட்டிருந்தாங்க. அதை ஒரு தலைப்பா நான் இதுல வச்சிருக்கேன். நாம ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள்ளேயே 5 கோடி மக்களை ரீச் பண்ணிட்டாங்க. அவங்ககிட்ட திருப்பி வாங்க வேண்டியதுதான். முதலமைச்சர் சொல்ற மாதிரி இதுல எந்த சிக்கலுமே இல்லை. தெளிவா இருக்கு..." எனப் பேசினார்.















