BB Tamil 9: "ஒருவருடன் பழகிவிட்டால், அந்த உறவை முறிப்பது ரொம்ப கஷ்டம்" - மனம் தி...
Ajith: ''அவரைப் பார்த்த நொடியிலேயே அது புரிந்தது!" - அஜித்தை சந்தித்த சூரி
நடிகர் சூரி தற்போது 'மண்டாடி' படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.
கடைசியாக அவர் நடித்திருந்த 'மாமன்' திரைப்படமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது சூரி, அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார்.
சூரியும் அஜித்தும் இயக்குநர் சிவா இயக்கத்தில் 'வேதாளம்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
அந்தப் படத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
அஜித்தைச் சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சூரி, அவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், "அவரைப் பார்த்த நொடியிலேயே புரிந்தது, உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல.
அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது.
அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
அஜித் நடிப்பில் இந்தாண்டு 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' என இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.
இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவிருக்கிறார். அதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் எனவும் பேச்சுகள் கோடம்பாக்கத்தில் இருந்து வருகின்றன.




















