செய்திகள் :

நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் - காரணம் என்ன?

post image

அமெரிக்காவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கவாய் சமீபத்தில் கூறிய கருத்துக்களுக்கு எதிராக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனை Stop Hindu Genocide என்ற அமைப்பு ஒருங்கிணைத்திருக்கிறது.

நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் - காரணம் என்ன?
நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் - காரணம் என்ன?

இந்த அமைப்பு கடந்த நவம்பர் 8ம் தேதி இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு நேரடியாக ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறது. அதில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மேற்பார்வையில் உள்ள கஜுராஹோ கோயிலில் இருப்பதாகக் கூறப்படும் வரலாற்று சிறப்புமிக்க விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரிய மனு மீது செப்டம்பர் 16 அன்று நடத்தப்பட்ட விசாரணையில் கவாய் கூறிய கருத்துகள் கடவுள் நம்பிக்கையை நிராகரிப்பதாக உள்ளது என அவருக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர்.

அந்த வழக்கில் நீதிபதி கவாய், "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்கிறீர்கள். கடவுளிடமே ஏதாவது செய்ய சொல்லுங்கள். இது ஒரு தொல்பொருள் தளம், ASI அனுமதி வழங்க வேண்டும்...." எனக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

Stop Hindu Genocide அமைப்பு தலைமை நீதிபதி கவாய் இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனக் கூறி நான்கு நாட்கள் இந்த போராட்டத்தை நடத்தியிருக்கிறது.

கவாய் மட்டுமல்லாமல் முன்னாட்களில் முன்னாள் தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் யு.யு.லலித், ஓய்வுபெற்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சூர்யா காந்த் உள்ளிட்ட பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களையும் எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறது இந்த அமைப்பு.

அவர்களின் கடிதத்தில் பண்டிகை நடைமுறைகள் மற்றும் கோயில் மேலாண்மை மீதான நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்துள்ளனர். "ஜனநாயகத்தின் தூணான இந்தியாவின் நீதித்துறை, அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மரியாதையுடன் தொடர்ந்து சேவை செய்வதை உறுதி செய்வதே இதன் நோக்கம்" என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பிற நகரங்களிலும் இதுபோன்ற விழிப்புணர்வு போராட்டங்களை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

``நிதிஷ் கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் நான் அரசியலை விட்டே போகிறேன்" - பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் (முதற்கட்டம் நவ., 6, இரண்டாம் கட்டம் நவ., 11) முடிந்துவிட்ட நிலையில் நாளை காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கவிருக்கிறது.243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் ஆ... மேலும் பார்க்க

'பிச்சையா எடுக்க முடியும்.. இன்னும் பல தொழில் தொடங்குவேன்' - அண்ணாமலை பரபரப்பு விளக்கம்

கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி ... மேலும் பார்க்க

DMK 75: 'இந்த உரையாடல் அவசியமானது!' அறிவுத் திருவிழா ஒரு விரிவான பார்வை

'கதை கேளு... கதை கேளு... ஒரு கதை சொல்றோம் கேளு!' என பறையடித்தபடி ஒரு கருஞ்சட்டை குழு மேடையேறுகிறது. சிவப்புத் துண்டை தோளில் போர்த்திய ஒரு பெண்மணி, 'கட்சின்னா என்னன்னு தெரியுமா?' எனக் கேட்கிறார். காவி ... மேலும் பார்க்க

'என்னை தாக்க முயன்ற முக்கிய குற்றவாளியை பனையூரில் பதுக்கி வைத்துள்ளார்கள' -எம்.எல்.ஏ., அருள் பேட்டி

பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி A ஃபார்ம், B ஃபார்ம் கையெழுத்திடுவது நான்தான் என்று... மேலும் பார்க்க

வந்தே மாதரம் 150 : அரிச்சல்முனையில் NCC மாணவர்கள், ராணுவ வீரர்களுடன் தேசியக்கொடி ஏந்தி மரியாதை!

வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மா... மேலும் பார்க்க

தமிழிசை: "விஜய்க்கு இந்த புத்தகத்தை அனுப்பியிருக்கிறேன்" - SIR விவகராத்தில் விளக்கம்

முன்னாள் ஆளுநரும் தமிழக பா.ஜ.க -வின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று (நவ. 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரலெழுப்புவது தேவையற்றது என்ற... மேலும் பார்க்க