செய்திகள் :

'தமிழ்நாட்டில் 7, பாஜக ரூட்டில் ஒரு ராஜ்ய சபா சீட்' - விட்டுக்கொடுத்த தினகரனுக்கு டெல்லி `பரிசு'?

post image

'விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை' எனச் சொல்லி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான கோபங்களை விட்டுக் கொடுத்து என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வை இணைத்திருக்கிறார் டிடிவி தினகரன். டெல்லியின் பேச்சுக்கு மரியாதைக்கு கொடுத்து கூட்டணிக்கு வந்ததால் அ.ம.மு.க-வுக்கு 'ராஜ்ய சபா சீட்' பரிசாக கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

நம்மிடம் பேசிய அவர்கள், "2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பினார் டிடிவி தினகரன். '18 சீட் கொடுத்தால் கூட்டணிக்கு வருகிறேன்' என பா.ஜ.க தலைமைக்கு தூதுவிட்டார். பா.ஜ.க முயற்சித்தும்கூட சசிகலா, தினகரன் என யாரும் கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதிக்காட்டியது எடப்பாடி - பன்னீர் தரப்பு.

இதனால் அப்செட்டான டிடிவி தினகரன் தே.மு.தி.க உள்ளிட்ட சின்ன சின்ன கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அவரை கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ளாததன் விளைவாக அ.தி.மு.க-வின் வாக்குகள் பிரிந்து 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவியதோடு ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் இழக்கும் நிலைக்கு எடப்பாடி தள்ளப்பட்டார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இச்சூழலில் சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு 2026-ல் தி.மு.க-வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர சம்மதம் தெரிவித்தார்" என்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கூட்டணி விவகாரங்கள் குறித்து அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்...

"2024 நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தோம். அதன்பிறகு 2025 ஏப்ரல் மாதம் அ.தி.மு.க என்.டி.ஏ-வுக்குள் வந்தவுடன் 'அ.ம.மு.க கூட்டணியில் இருக்கக்கூடாது' என கருதியது அ.தி.மு.க. எங்களுக்கான முக்கியத்துவம் குறையத்தொடங்கியதும் என்.டி.ஏ-வைவிட்டு விலகினோம். ஆனால் கடந்த மூன்றுமாதமாக எங்களுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியது டெல்லி. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் தினகரன்.

'அ.ம.மு.க வேண்டாம்' என முன்பு முரண்டுபிடித்த எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு எங்களுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாக சொன்னார்கள். டெல்லியும் கூட்டணிக்கு வரும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டது. அவர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்து நாங்களும் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டோம். ஆரம்பத்தில் 18 சீட் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

10 சீட்டுக்கு மேல் வாய்ப்பில்லை எனச் சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடியுடன் கலந்தாலோசித்து 7 எம்.எல்.ஏ தொகுதிகளாக ஒப்பந்தமாகியிருக்கிறது. அதோடு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இருந்து ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்கள்" என்றனர்.

கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்கினாலும்கூட தனது சொந்த கணக்கிலிருந்து எம்.பி சீட் கொடுத்து அ.ம.மு.க-வை கூட்டணிக்குள் இழுத்திருக்கிறது பாஜக என்கிற தகவல் தான் தற்போது அரசியல் மட்டத்தில் ஹாட் டாப்பிக்.!

பாஜக-வை எதிர்க்காத விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? - குழப்பத்தில் கதர்கள்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலகிச் சென்ற அ.தி.மு.க-வை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்த டெல்லி பா.ஜ.க., 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களை கையிலெடுத்திருக்... மேலும் பார்க்க

சென்னை தொகுதிகளுக்கு மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்... கறார் காட்டும் திமுக!

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் ஒருசில தொகுதிகளை கைபற்ற காய்நகர்த்தி வருகிறார்கள் வி.சி.க, கம்யூனிஸ்ட், ... மேலும் பார்க்க

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. அதன் கீழ், சில நடைமுறைகள் மாறும் அல்லவா? அப்படிப் பான் கார்டு எங்கெங்கு தேவை என்பதைப் பார்க்கலாம்... வாங்க...1. முன்பு, ஒரே ந... மேலும் பார்க்க

கலைஞர் உரிமைத் தொகை: ``வங்கி கணக்கில் ரூ.5000" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில... மேலும் பார்க்க

தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன?

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்திற்குக் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி கேட்டு தவெக-வினர் போலீஸில் மனு அளித்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு போலீஸார் தரப்பி... மேலும் பார்க்க

`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?' - முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்கிறார்?

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டிருந்த குரூப் 2 தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்ட‌ நிலையில், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அத... மேலும் பார்க்க