செய்திகள் :

தயாராகும் கங்குலியின் பயோபிக்; படப்பிடிப்பு தளத்திற்கு வந்த கங்குலி; யார், யார் நடிக்கிறார்கள்?

post image

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி வரும் பயோபிக் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் தொடங்கியிருக்கிறது. கங்குலியின் கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்து வருகிறார்.

Ganguly
Ganguly

'தாதா: தி சௌரவ் கங்குலி ஸ்டோரி' என்று இப்படத்திற்குப் பெயரிடப்பட்டிருக்கிறது. கங்குலியின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அவரது கிரிக்கெட் பயணத்தோடு தொடர்புடைய முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கங்குலியின் பெஹாலா இல்லத்தில் படப்பிடிப்பு தொடங்கியது.

இதில் நடிகர் ராஜ்குமார் ராவ் சிவப்பு நிற ட்ராக்சூட் அணிந்து இளம் வயது 'தாதா'வாக நடித்த காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்த ஐபிஎல் சீசனின் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் மைதானத்திற்குள் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

Dada - The Sourav Ganguly Story
Dada - The Sourav Ganguly Story

கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனைகள் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் ஜெர்சியைக் கழற்றி அவர் கொண்டாடிய வரலாற்றுத் தருணம் உள்ளிட்ட பல முக்கியக் காட்சிகள் இங்குப் படமாக்கப்படவுள்ளன.

பெஹாலாவில் உள்ள தனது இல்லத்திலும், ஈடன் கார்டன்ஸ் மைதானத்திலும் படப்பிடிப்பு நடந்தபோது சௌரவ் கங்குலி நேரில் வந்து படக்குழுவினரைச் சந்தித்துள்ளார்.

விக்ரமாதித்யா மோத்வானே இயக்கும் இத்திரைப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் ப்ரிதம் இசையமைக்கிறார்.

கங்குலியின் மனைவி டோனா கங்குலியின் இளம் வயது கதாபாத்திரத்தில் சோனார்பூரைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீஜாவும், அவரது முதிர்ந்த கதாபாத்திரத்தில் தான்யா மணிக்தலாவும் நடிக்கிறார்கள். மேலும், கங்குலியின் தாயாராக அபராஜிதா அத்யாவும், தந்தையாக சாஸ்வதா சாட்டர்ஜியும் நடிக்கிறார்கள்.

"சச்சின், கோலியை விட சிறப்பாக விளையாட வேண்டும்" - சூர்யவன்ஷியை வாழ்த்திய கங்கனா ரனாவத்

நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயதுடைய இளம் வீரரான சூர்யவன்ஷி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.இந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை ... மேலும் பார்க்க

Aamir Khan: ஷாருக்கான், சல்மான் கான் முன்னிலையில் திருமணம்; கௌரியை மணமுடிக்கும் ஆமீர் கான்!

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் விவாகரத்து செய்த பிறகு இரண்டு முன்னாள் மனைவிகளிடமும் சுமூக உறவை பேணி வரும் ஆமீர் கான் கடந... மேலும் பார்க்க

'என்னை நானே பலமுறை துன்புறுத்தி இருக்கிறேன், ஆனால்.!'- உடற்பயிற்சி குறித்து டாப்ஸி அட்வைஸ்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.சமீபத்தில் அனுபவ் சின்கா இயக்​கத்​தில் அவர் நடித்த ‘அஸி’ என்ற திரைப்​படம் வெளி​யானது.தொ... மேலும் பார்க்க

"நாங்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் அல்ல" - ரசிகருடனான செல்பி விவகாரம் குறித்து பூஜா ஹெக்டே விளக்கம்

வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே நடிப்பில் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை'ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியிருக்கும் இ... மேலும் பார்க்க

Don 3 விவகாரம்: "இனி அவருடன் பணியாற்ற விரும்பவில்லை"- ரன்வீர் சிங்கின் சமரசத்தை ஏற்க பர்ஹான் மறுப்பு

நடிகர் ஷாருக்கான் நடித்து பெரிய அளவில் ஹிட்டான டான் படத்தின் மூன்றாவது பகுதியாக டான் 3 படத்தை எடுக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் முடிவு செய்து ஷாருக்கானை அனுகினார். ஆனால் அதில் நடிக்க ஷாருக்கான் மறுத்துவ... மேலும் பார்க்க

'இன்ஸ்டாவில் பாலிவுட் பிரபலங்களை Unfollow செய்தது ஏன்?' - இயக்குநர் கரண் ஜோகர் விளக்கம்

பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தி இயக்கியும் இருக்கிறார். அவர் திடீரென இன்ஸ்டாகிராமில் ஷாருக் கான், ரன்வீர் சிங், கரீனா கபூர் கான், ஜ... மேலும் பார்க்க