செய்திகள் :

'தள்ளிப்போகும் தேதி' - SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு; அவசரம் வேண்டாம் மக்களே

post image

பெரும்பாலானோர் SIR படிவத்தை நிரப்பிக் கொடுத்திருப்பீர்கள். இன்னும் சிலர் சில சந்தேகங்களால் எஸ்.ஐ.ஆர் படிவத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கலாம்.

இன்னும் 4 நாள்கள் தானே உள்ளது என்கிற அவசரம் இனி உங்களுக்கு வேண்டாம்.

தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிப்பதற்கான தேதியை தற்போது நீட்டித்துள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

தேதி மாற்றம் விவரம்

எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: டிசம்பர் 11, 2025

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தேதி: டிசம்பர் 16, 2025

ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டு தேதி: டிசம்பர் 16, 2025 - ஜனவரி 15, 2026

தேர்தல் ஆணையம் ஆட்சேபனை மற்றும் மேல்முறையீடுகளை சரிபார்க்கும் தேதி: டிசம்பர் 16, 2025 - பிப்ரவரி 7, 2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - பிப்ரவரி 14, 2026

எஸ்.ஐ.ஆர் படிவத்தில் சந்தேகமா?

ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டுத் தெளிவாக எஸ்.ஐ.ஆர் படிவத்தை எந்தக் குளறுபடியும் இன்றி நிரப்புங்கள்.

இந்தப் படிவம் தான் உங்களுடைய வாக்குரிமையை உறுதி செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

``கஜானா சாவி என்னிடம்தான், எங்களுக்கு ஓட்டுப்போட்டால்தான் நிதி'' - தேர்தல் பிரசாரத்தில் அஜித்பவார்

மகாராஷ்டிராவில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்ட நிலையில் ஆளும் கட்சி தலைவர்கள்தான் ஒவ்வொரு இடமும் சென்று தீவிர பிரசாரம் ... மேலும் பார்க்க

TVK: ``விஜய் வெறுப்பு அரசியலையே உயர்த்திப்பிடிக்கிறார்" - வேலூரில் திருமாவளவன்

வேலூர் வி.ஐ.டி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``ஆளுநர் மாளிகைக்கு இதுவரை ராஜ்பவன் என்று இருந்த பெயரை இப்போது ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பிலான பிரசாரக் கூட்டம் ... மேலும் பார்க்க

`மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம்' - வழக்கில் மன்னிப்பு கோரும் நெதன்யாகு; இஸ்ரேல் அதிபர் பதில் என்ன?

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம் ஆகிய பிரிவுகளில் மூன்று தனித்தனி வழக்குகள் நடந்து வருகின்றன. ட்ரம்ப் கடிதம் இந்த வழக்குகளுக்கான விசாரணை 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ... மேலும் பார்க்க

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் | Photo Album

இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் ப... மேலும் பார்க்க