BB Tamil 9: "வாழ்த்துகள் ரம்யா" - பிக் பாஸ் சொன்னதும் நெகிழ்ந்த ரம்யா
BB Tamil 9: "வாழ்த்துகள் ரம்யா" - பிக் பாஸ் சொன்னதும் நெகிழ்ந்த ரம்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 8 வாரங்களைக் கடந்துவிட்டது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் எவிக்ஷன் இல்லாத வாரமாக பிக் பாஸ் அறிவித்துவிட்டார்.

இதனால் இந்த வாரம் குறைவான ஓட்டை பெற்ற ரம்யா, வியானா எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டனர்.
மேலும் 21-வது நாளில் வெளியேறிய ஆதிரை நேற்று (நவ.30) மீண்டும் பிக் பாஸிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
ஆதிரையின் பிக் பாஸ் என்ட்ரியால் ஹவுஸ் மேட்ஸ் சர்ப்பரைஸாக இருந்தாலும் fJ வும், வியானாவும் மட்டும் அதிர்ச்சியாகியிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய (டிச.1) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகியிருக்கிறது.

இதில் இந்த வாரத்திற்கான வீட்டு தல டாஸ்க் நடக்கிறது. இந்த டாஸ்க்கில் ரம்யா வெற்றி பெற "வாழ்த்துகள் ரம்யா, பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத்திற்கான வீட்டுத் தல நீங்க தான்" என்று பிக் பாஸ் அறிவிக்க ரம்யா நெகிழ்ச்சியாகிறார்.




















