செய்திகள் :

IND vs SA: ``பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன், இந்தப் போட்டியில நாங்க கொஞ்சம்.!'' - கே.எல் ராகுல்

post image

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (நவ.30) ராஞ்சியில் நடைபெற்றது.

IND vs SA
IND vs SA

இதில், 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்நிலையில் அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் கே.எல் ராகுல், "இந்தப் போட்டியில் எங்களுக்கு பதற்றம் இல்லை என்று சொன்னால் அது நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும்.

மீண்டும் நாட்டிற்காக கேப்டன் பொறுப்பேற்றுள்ளேன் என்பதால் என் மீது எனக்கே எதிர்பார்புகள் எழுந்துள்ளன. தென்னாப்பிரிக்க வீரர்கள் எங்களை கடைசி எல்லை வரைக்குமே தள்ளினார்கள்.

அது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. அணிக்கு திரும்பிய ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவதைப் பார்க்கும் போதே ஜாலியாக இருக்கும். நான் நீண்ட காலமாக இதனைப் பார்த்து வருகிறேன்.

அவர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. அதேபோல ஹர்ஷித் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.

Indian Team
Indian Team

அவர் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தபோதே அவர் ஒரு ஸ்பெஷலான வீரர் என்று எனக்குத் தெரியும். இந்திய அணி நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த வீரர் இவர்தான்.

அவர் இன்னும் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்றாலும், அவரிடம் நிறையத் திறமை இருக்கிறது.

கடந்த 2-3 தொடர்களாக எனக்கு வழங்கப்பட்ட பணியை நான் செய்து வருகிறேன். அணியின் வெற்றிக்காக விளையாடுவது எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் நல்லது என்று நினைக்கிறேன்" என கே.எல் ராகுல் பேசியிருக்கிறார்.

IND vs SA: "களத்தில் இறங்கினால் 120% உழைப்பைக் கொடுப்பேன்"- ஆட்டநாயகன் கோலி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையி... மேலும் பார்க்க

`ஆடின்னே இருப்போம்' - கடைசி வரை போராடிய தென்னாப்பிரிக்கா; சதத்துடன் மாஸ் காட்டிய கோலி - ஹைலைட்ஸ்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் ராஞ்சியில் தொடங்கியது.டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியி... மேலும் பார்க்க

Andre Russell: "வேறு ஜெர்சியில் என்னைப் பார்ப்பது விசித்திரமாக இருந்தது" - IPL-ல் இருந்து ஓய்வு

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்த வீரர் ஆண்ட்ரே ரசல். 2012, 13 ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய ரசல், அதன... மேலும் பார்க்க

IND vs SA: "கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல" - ஏபிடி சொல்லும் காரணம் என்ன?

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வொயிட் வாஷ் ஆனதைத் தொடர்ந்து இன்று ஒரு நாள் தொடரில் விளையாடவிருக்கிறது இந்திய அணி.கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது முதல் இந... மேலும் பார்க்க

INDvSA: "கோலி, ரோஹித் போன்ற மூத்த வீரர்கள் இருப்பது உத்வேகத்தைத் தருது" - கேப்டன் கே.எல்.ராகுல்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலைய... மேலும் பார்க்க

Faf du Plessis: "இது கடினமான முடிவு; ஆனால்" - 2026 IPL பற்றி ஷாக் கொடுத்த முன்னாள் CSK எல்லைச்சாமி

இந்தியன் பிரீமியர் லீக்கின் ஆல் டைம் ஃபைன் அண்ட் பெஸ்ட் வெளிநாட்டு வீரர்களில் தவிர்க்க முடியாதவர் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்.2011 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டாலும் அந்த சீசன் முழுவதும் ... மேலும் பார்க்க