`தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்று என் கண்களுக்குத் தெரியாது' - ட...
`தவெகவுடன் கூட்டணி பேசவில்லை' - காங் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி
சட்டமன்றத் தேர்தலையொட்டி சத்யமூர்த்தி பவன் பரபரப்பாகியிருக்கிறது. தமிழக காங்கிரஸின் எதிர்ப்பை மீறி கூட்டணிக்குள் ஊதுபத்தி கொளுத்திக் கொண்டிருக்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி. ஜோதிமணி காங்கிரஸின் உட்கட்சி பூசலை ஓபனாக போட்டுடைக்க, இன்னொரு பக்கம் பிரபாகரன் படத்தை காரணம் காட்டி வைகோ அமைத்த கூட்டணி மேடையில் ஏறாமல் தவிர்த்திருக்கிறது தமிழக காங்கிரஸ்.

இந்த விவகாரங்கலெல்லாம் பல யூகங்களுக்கு வழிவிட பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்.
அவர் பேசியதாவது, 'தமிழக காங்கிரஸை வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்து யோசிக்கப்படும். ஜோதிமணியின் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும். உட்கட்சி விவகாரங்கள் பொதுவெளிக்கு செல்லக்கூடாது. இதுபோன்ற கருத்துகள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

கரூர் மாவட்ட காங்கிரஸிடம் விளக்கம் கேட்டுள்ளோம். தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேசுகிறது என்பது வதந்தி. திமுகவுடன் மட்டுமே கூட்டணி குறித்து பேசிவருகிறோம். திமுகவுடன் எங்களுக்கு நம்பகத்தன்மைமிக்க கூட்டணி உள்ளது. அதனால்தான் ஒரு மாதத்திற்கு முன்பாகவே குழு அமைத்து திமுகவுடன் பேசி வருகிறோம்' என்றார்.
தவெகவும் காங்கிரஸூம் கூட்டணிக்காக பேசிவருகின்றன என அரசியல் வட்டாரத்தில் புகை கிளப்பிக் கொண்டிருந்த விவகாரத்தும் தற்காலிகமாக ஒரு முற்றுப்புள்ளியை கிரிஷ் சோடங்கர் வைத்திருக்கிறார்.


















