செய்திகள் :

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

post image

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதாக கூறிவிட்டு அந்த குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், இது குறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

hospital

இந்நிலையில், தீவிரமாக தேடி, 5 மணி நேரத்தில் காவல்துறையினர் குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். குழந்தையை கடத்திய பெண் செவிலியர் சீருடை அணிந்து தடுப்பூசி போடுவதாகக் கூறி குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். பிடிபட்ட பெண்ணின் பெயர் மீனாட்சி என்று தெரியவந்திருக்கிறது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்ததால், குழந்தையை எடுத்துச் சென்றதாகக் கூறியிருக்கிறார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து? - இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு... வீட்டில் ரெய்டு!

சென்னை போலீஸ் கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றப்பிரிவின் கீழ் விபச்சார தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி. இவரின் வீடு சென்... மேலும் பார்க்க