செய்திகள் :

திருச்சி: பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை! - 5 பேரை தேடும் போலீஸ்

post image

மகாராஷ்டிராவைச் சேர்ந்த உதய் (வயது: 36) என்பவர் திருச்சியில் நகை மதிப்பிடும் பணியைச் செய்து வருகிறார். அவர், குடும்பத்தோடு பெரிய செட்டித் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் அனைவரும் கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான மகாராஷ்டிராவிற்குச் சென்று உள்ள நிலையில், உதய் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர் வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தில் அவர் கடையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தங்கி உள்ளார். இந்த நிலையில், மதியம் அந்த இளைஞரின் வீட்டிற்குச் சென்ற ஐந்து பேர், 'உங்கள் ஓனரிடம் பேச வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.

robbery spot

அதனைத் தொடர்ந்து, அவர்கள் ஐந்து பேரையும் இளைஞர், உதய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பேசிக் கொண்டிருந்த அவர்கள் ஐந்து பேரும், திடீரென உதய்யை அடித்து அவரை வீட்டு பாத்ரூமில் வைத்து அடைத்து கதவை பூட்டிவிட்டனர். மேலும், இளைஞரையும் அடித்து கட்டிப்போட்டு விட்டு உதய் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து, உதய் கோட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த உதய், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், வீட்டில் ஒரு கிலோ அளவிற்கான நகை வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவை அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என உதய் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

robbery spot

ஒரு கிலோ நகை கொள்ளை அடிக்கப்பட்டதா என்பது குறித்தும், உதய்யை அடித்து அவர் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றது யார் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, முகமூடி அணிந்த நபர் ஆட்டோவில் ஏறி சென்றதால் அது குறித்தும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிக உள்ள முக்கிய பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம், திருச்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

பாவூர்சத்திரம்: போதையில் இளைஞர் அடித்து கொலை; `101'க்கு கால் செய்து நாடகம்- நண்பர் சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரவீன் (வயது 26), இவரும் அதே ஊரில் வடக்குத் தெரு லிவிங்ஸ்டன் மகன் முகிலன் (எ) வசந்த் (20) இருவரும் சிறு... மேலும் பார்க்க

மகளிர் விடுதிக்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்த மளிகைக்கடைக்காரர் - ஒடிசாவில் அதிர்ச்சி

ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் உள்ள கங்காபாடா என்ற இடத்தில் மளிகைக்கடை வைத்திருப்பவர் தீபக் பிரதான்(67). இவரது கடைக்கு அருகில் மகளிர் விடுதி ஒன்று இருக்கிறது. அடிக்கடி அவரது கடை வழியாக பெண்கள் மற்றும் மாண... மேலும் பார்க்க

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது?' - MTC பஸ் தகராறில் முதியவரை கொன்ற போதையில் இருந்த இளைஞன்

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது' என்று கேட்டு தகராறு ஆகி, சென்னையில் ஒரு கொலை நடந்துள்ளது.சென்னை தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் 25 வயதான இளைஞர் அமர்நாத் 70-G மாநகர பஸ்ஸில் ஏறியுள்ளார். அதே பஸ்ஸில் 74... மேலும் பார்க்க

மும்பையில் நள்ளிரவு டி.வி பார்ப்பதில் தகராறு: மனைவி, மகள், பேத்தியை கத்தியால் குத்திய முதியவர் கைது

மும்பை தானேயில் உள்ள ரபோடி கிராந்தி நகரில் வசிப்பவர் முகமது தாரிக் கான்(64). இவர் தனது மனைவி மற்றும் மகள், பேத்தியுடன் வசித்து வந்தார். சம்பத்தன்று முகமது தாரிக் கான் பேத்திக்கு பிறந்தநாள் ஆகும். இதனா... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசம்: பிறந்தநாள் பார்ட்டியில் கேக்கை முகத்தில் தடவியதால் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் என்ற இடத்தில் அங்குள்ள ஜிம் ஒன்றில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பார்ட்டிக்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஜிம்மிற்கு அடிக்க... மேலும் பார்க்க

தேனி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு; தொடரும் விபத்துகள்

தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள காட்டுப்பள்ளி வாசல் தெருவில் திருப்பதி என்பவருக்குச் சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் (எ) தீனா... மேலும் பார்க்க