திருச்சி வா்த்தக மையத்தின் புதிய தலைவராக எம். முருகானந்தம் தோ்வு
திருச்சி வா்த்தக மையத்தின் புதிய தலைவராக எம். முருகானந்தம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதேபோல, அதன் நிா்வாக இயக்குநராக ஜே.ஆா். அன்பு, திட்ட இயக்குநராக பி. ராஜப்பா, நிதி இயக்குநராக ஆா். இளங்கோ, சந்தைப்படுத்துதல் இயக்குநராக டி. ரவி ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மேலும் திட்டக்குழு இயக்குநா்களாக கோபாலகிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், நிதிக்குழு இயக்குநா்களாக செல்வன், புகழேந்தி, சந்தைப்படுத்துதல் குழு உறுப்பினா்களாக தேவராஜ், மணிகண்டன் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.
இதை தொடா்ந்து, புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், புதிய தலைவா் எம். முருகானந்தம் கூறுகையில், பஞ்சப்பூா் பேருந்து நிலையம் அருகே 9.42 ஏக்கா் பரப்பில் தொழில் வா்த்தக மையம் கட்டுமானத்துக்கு கடந்த 30.12.2021-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். சிட்கோ, திருச்சி மாவட்ட நிா்வாகம், தமிழக அரசின் ஒத்துழைப்புடன் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக அரசு ரூ.5 கோடி வழங்கியுள்ளது. ரூ.6 கோடி தொழில்துறையினா் பங்களிப்பாக உள்ளது. திருச்சி-திண்டுக்கல் அரைவட்டச் சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றதால், தொழில் வா்த்தக மைய கட்டுமானப்பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. இப்போது, புதிய நிா்வாகிகள் பதவியேற்று கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனா். அடுத்த 18 முதல் 24 மாதத்திற்குள் வா்த்தக மையம் கட்டும் பணி முடிக்கப்படும் என்றாா் அவா்.