செய்திகள் :

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம்; 9-ம் தேதி தேரோட்டம்

post image

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விளங்கி வருகிறது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா, ஆவணித் திருவிழா, கந்தசஷ்டி, தைப்பூசம்  உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

அதே போல் இந்தாண்டுக்கான ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்குத் திருக்கோயில் நடை திறக்கப்பட்டது.

தீபாராதணை
தீபாராதணை

1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 5.15 மணிக்குக் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மாப்பொடி உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை அப்பர் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கொடியேற்றம்
கொடியேற்றம்

5-ம் நாள் திருவிழாவான வரும் செப்டம்பர் 4-ம் தேதி இரவு 7:30 மணிக்கு மேலக் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று, சுவாமி - அம்பாள், தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறுகிறது. 7ம் நாள் திருவிழாவான வரும் செப்டம்பர் 6-ம் தேதி சுவாமி 5 மணிக்கு உருகு சட்டசேவை நடைபெறுகிறது.

அன்று காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர், வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளளும் அன்று மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வருதலும் நடைபெறும்.

8-ம் நாள் விழாவான வரும் செப்டம்பர் 7-ம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தியில் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்து, அன்று நண்பகல் 12 மணிக்கு சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறுகிறது.

பக்தர்கள்
பக்தர்கள்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் செப்டம்பர்  9-ம் தேதி அன்று காலை 7 மணிக்கு விழாவின் சிகர நிகழ்வான நடைபெறுகிறது. திருவிழா காலங்களில் தினமும் சுவாமி – அம்பாள் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெறுகிறது.

வாழ்வில் பிரளயமே வந்தாலும் கவலையில்லை; அபிஷேகத் தேனை உறிஞ்சும் இந்த விநாயகர் சந்நிதிக்கு வாருங்கள்

கும்பகோணத்துக்கு வடமேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில், மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம். வரலாற்றுச் சிறப்பு மிக்கது இந்தத் தலம். இங்கு நடந்த போரில் முதலாம் ஆதித்த சோழன் வெற்றி பெற்று ... மேலும் பார்க்க

வெளியே சொல்லமுடியாத அளவுக்கு வாழ்க்கை கசக்கிறதா... இந்த கணேசரின் சந்நிதிக்குச் சென்று வாருங்கள்!

திருப்போரூர் முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் தலம் என்பது அனைவரும் அறிந்த தகவல். முருகன் சூரபதுமனோடு வான் வெளியில் இந்தத் தலத்தில் யுத்தம் செய்தார் என்பதாக ஐதிகம். எனவே இங்கே சென்றாலே வாழ்வில் பக... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கலங்காமல் காத்த விநாயகர்: தீராத பிரச்னைகளும் தீர்க்கும் கணபதி சந்நிதி!

விநாயகர் தலங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றவை. ஆலயம் எதுவாக இருந்தாலும் அங்கே கணபதி குடியிருப்பார் என்பதை நாம் அறிவோம். ஆனால் சில தலங்களில் அந்த கணபதிக்குத் தனிச்சிறப்பு இருக்கும். அவரைத் தவறாமல் ... மேலும் பார்க்க

திருக்கடவூர் கள்ளவாரண பிள்ளையார்: ஆயுள் விருத்தி அருளும் கணபதி சந்நிதி! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

திருக்கடவூர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அன்னை அபிராமியும் அப்பன் அமிர்தகடேஸ்வரரும்தான். அதே தலத்தில் அருளும் விநாயகப்பெருமான் மிகவும் முக்கியமானவர். அவரைத்தான் முதலில் வணங்க வேண்டும். மேலும் அவ... மேலும் பார்க்க

கோவை, புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர்: நாகதோஷம் தீரும்... விரைவில் வேண்டுதல் நிறைவேறும்!

விநாயகரை வழிபட்டால் வினைகள் தீரும். எளிமையாக மனம் உருகி அழைத்தாலே ஓடிவந்து காத்திடுபவர் விநாயகர். அதனால்தான் ஊரெங்கும் தெருவுக்குத் தெரு விநாயகர் கோயிலை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். ... மேலும் பார்க்க

திருச்சி பீமநகர் வேணுகோபால சுவாமி திருக்கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் ரோகிணி நட்சத்திர வழிபாடு!

திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் என்று பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர்த்தும் அபல நூறு பழைமையான சிறப்புடைய ஆலயங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று ... மேலும் பார்க்க