செய்திகள் :

திருச்செந்தூர் கோவில்: "25 லட்சம் ரூபாய்க்கு முறைகேடு; கண்காணிக்காதது ஏன்?" - நீதிபதி கேள்வி

post image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கட்டண தரிசன முறை நடைமுறையில் உள்ளது. இதில் ரூ.100 டிக்கெட் பெறும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ரூ.100 டிக்கெட் வினியோகம் செய்ததில் ரூ. 25 லட்சத்து 24 ஆயிரத்தை கோவில் ஊழியர்கள் முறைகேடு செய்ததாகப் புகார்கள் எழுந்தன.

அதன்பேரில் இந்தப் புகார் குறித்து விசாரிக்கப்பட்டதில் தற்காலிக பெண் ஊழியரான மேனகா என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் கணினி டிக்கெட்டுகளைச் சரி பார்க்காமலும் அலட்சியமாக இருந்ததாக கோவில் பணியாளர்கள் பாலமுருகன், உச்சிமாகாளி ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் பாலமுருகன், உச்சிமாகாளி ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

இந்த மனு நீதிபதி தனபால் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ''ரூ.25 லட்சம் வரை முறைகேடு நடந்து இருக்கிறது. இதனை உயர் அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்காதது ஏன்? திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு எத்தனை பக்தர்கள் வருகின்றனர். அவர்களால் எவ்வளவு வருமானம் வருகிறது. இந்த வருமானம் முறையாக வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு செய்வது அதிகாரிகளின் பணி தானே?" எனக் கேள்விகளை எழுப்பினார்.

விசாரணை முடிவில், இந்த முறைகேடு விவகாரத்தில் நடந்தது என்ன?, இதில் மனுதாரர்களின் பங்கு என்ன? என்பன குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு: ``உண்மைக்கு புறம்பான செய்தி" - உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை அக... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் அரசின் நிலைப்பாடு என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்... மேலும் பார்க்க

Pocso சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க ‘சிங்கப்பெண் விழிப்புணர்வு’ முகாம்! - உயர் நீதிமன்ற உத்தரவு

திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை போக்சோ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்ககுளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பலரும் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிப... மேலும் பார்க்க

`வங்கிகளில் மக்கள் பணம் வைக்கும் விதத்தில் மாற்றம் ; RBI தங்கத்தை விற்கிறதா?' - அறிக்கை சொல்வதென்ன?

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புளூம்பெர்க் ஊடகம், தனது பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தாவின் ஆய்வை மேற்கோள்காட்டி ஒரு செய்தியை வெளியிட்டது. அதன்படி, மே 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில், இந்திய... மேலும் பார்க்க

அழைப்பு விடுத்த ஸ்டாலின்... திமுகவில் இணையும் விசிக பனையூர் பாபு?

'ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளையை தத்தெடுத்துக் கொண்டாரா திருமாவளவன்?' என விஜய் அமைச்சரவைக்கு வி.சி.க சென்றதை விமர்சித்து, அக்கட்சியிலிருந்து விலகிய ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.... மேலும் பார்க்க

`இந்திய வீடுகளில் உறங்கும் 35,000 டன் தங்கம்' - மோடி சொல்லும் `மறுசுழற்சி'; மாறுகிறதா மக்கள் மனநிலை?

இந்திய வீடுகளின் லாக்கர்களிலும், பீரோக்களிலும், கோயில் கருவறைகளிலும் சுமார் 35,000 டன் தங்கம் உறங்கிக் கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு கற்பனைக்கு எட்டாதது; சுமார் 3.8 டிரில்லியன் டாலர்கள்! இது நாட்டின் ... மேலும் பார்க்க