"தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை" - மக்களவையில் திரும...
திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்பட்டா, டெண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிற தரத்துடன் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
போலி துப்பட்டா வழங்கி மோசடி
உடனே துப்பட்டா மாதிரிகள் எடுத்துச்செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டத்தில் பட்டு துணியில் தயாரிப்பதற்கு பதில் சுத்தமான பாலிஸ்டர் துணியில் துப்பட்டா தயாரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பாலிஸ்டர் துணி மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் வி.ஐ.பி பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்த பிறகு அவர்களை கோயில் பண்டிதர்கள் கெளரவிப்பது வழக்கம். அவ்வாறு கெளரவிக்கப்படும் வி.ஐ.பி.க்களுக்கு பட்டு துப்பட்டா வழங்குவது வழக்கம்.

இதற்காக அடிக்கடி பட்டு துப்பட்டா கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டிலிருந்து இதுவரை ஆந்திராவில் உள்ள நகரி என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இந்த துப்பட்டாவை 10 ஆண்டுகளாக சப்ளை செய்துவருகிறது. பட்டுக்கு பதில் மலிவு விலையில் கிடைக்கும் பாலிஸ்டரில் துப்பட்டா சப்ளை செய்தது குறித்து முழுமையான விசாரணை நடத்தும்படி ஆந்திரா லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திருப்பதி தேவஸ்தானம் போர்டு உத்தரவிட்டிருக்கிறது.
ரூ.54 கோடி மோசடி
அதனடிப்படையில் புதிதாக வந்த பட்டு துப்பட்டாவில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை எடுத்துச்சென்றுள்ளனர். தவறு செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருப்பதி தேவஸ்தனம் போர்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. துப்பட்டாவில் நான்கு புறமும் பட்டால் நெய்யப்பட்டிருக்கும். `ஓம் நமோ வெங்கடேசாயா' என்று ஒரு புறம் சமஸ்கிருதத்திலும், மற்றொருபுறம் தெலுங்கிலும் எழுதப்பட்bருக்கும். மேலும் சங்கு, சக்கரம், நாமமும் இடம்பெற்றிருக்கும். கடந்த 10 ஆண்டில் போலி துப்பட்டா சப்ளை செய்ததில் ரூ.54.95 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது.

















