செய்திகள் :

திருப்பரங்குன்றம்: ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

post image

ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும்.

ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற அனுமதிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்
கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

ஆனால், கார்த்திகை தீபம் தினமான நேற்று (டிசம்பர் 3) வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வலதுசாரி அமைப்பினர் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறான சூழலில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ``CISF வீரர்களின் பாதுகாப்புடன் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும்" என்று நேற்று மாலை உத்தரவிட்டார்.

அதன்படி CISF வீரர்களுடன் மனுதாரர் தரப்பினர் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஆயத்தமாகினர். அதேவேளையில் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினரின் ஆர்ப்பாட்டம் அதிகரிக்கவே போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இது கலவரமாக மாறுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். மறு உத்தரவு வரும் வரையில் 144 தடை தொடரும் வகையில் இது அமல்படுத்தப்பட்டது.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

மறுபக்கம், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில் நீதிமன்ற அமர்வு, ``ஏதோவொரு உள்நோக்கத்துடன் மாநில அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால் CISF பாதுகாப்புக்கு செல்ல உத்தரவிடப்பட்டது" என்று குறிப்பிட்டு மாநில அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் என்றும் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

அதன்படி, உடனடியாக இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``மதுரை காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உடனடியாக காணொளி மூலம் ஆஜராக வேண்டும்" என்று அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார்.

அதோடு, ``ஆஜராகவில்லையென்றால் கடுமையான உத்தரவைப் பிறப்பிக்கவும் தயங்க மாட்டேன்" எனவும் எச்சரித்தார்.

அதன்படி விசாரணையில் ஆஜரான காவல் ஆணையர் லோகநாதனிடம், ``நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா?" என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வியெழுப்பினார்.

திருப்பரங்குன்ற கார்த்திகை தீபம் விவகாரம்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

அதற்கு, ``பேரிகார்டுகளை அமைத்து பிற்பகல் 3:30 மணி முதல் நடவடிக்கை எடுத்தோம். ஆனால், கூட்டம் அதிகமாகி பிரச்னை ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்" என்று காவல் ஆணையர் பதிலளித்தார்.

விசாரணை முடிவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், ``தீபம் ஏற்றுவதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன்" என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார்.

53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு; 14 ஆண்டுகள் போராடி ஜீவனாம்சம் பெற்ற பெண்

கணவன்–மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், விவாகரத்துக்காக இருவரும் பல ஆண்டுகள் கோர்ட் படியேறுவது வழக்கமாக உள்ளது. மனைவியுடன் சில நாள்கள் மட்டுமே வாழ்ந்தாலும், விவாகரத்து ஏற்படும் போது கணவன்... மேலும் பார்க்க

``சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் BJP, RSS வழக்கறிஞர்களுக்கு கொலீஜியம் பரிந்துரை" - திருமா

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கமாக உள்ள வழக்கறிஞர்களை கொலீஜியம் பரிந்துரைப்பதாகவும், இதில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வி.சி.க தலைவர் எம்.ப... மேலும் பார்க்க

ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம் - காரணம் என்ன?

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்களில் ஒன்று, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கு. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு விதிக்கப்பட்... மேலும் பார்க்க

`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் அதிரடி

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2017 ஆம் ஆண்டில் வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக நான் உட்பட 5 பேர் மீது மதுக்கூர் போல... மேலும் பார்க்க

Surya Kant: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்ய காந்த்; மோடி, அமித் ஷா பங்கேற்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாய் பதவிக்காலம் நவம்பர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்றார். உச்ச நீதிமன... மேலும் பார்க்க

``என் தீர்ப்புகளில் மிக முக்கியமானது" - புல்டோசர் வழக்கு குறித்து பகிர்ந்த பி.ஆர்.கவாய்

உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பி.ஆர். கவாய் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். அதனால் நேற்று கடைசி வேலை நாளின்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (SCBA) பிரிவு உபசார விழா நடைப... மேலும் பார்க்க