செய்திகள் :

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை!

post image

மதுரை: திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதித்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதால், இந்து அமைப்புகள் சாா்பில் திருப்பரங்குன்றம் கோயில் முன் செவ்வாய்க்கிழமை (பிப். 4) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக, இரு வேறு மதத்தவரிடையே அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 163, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஆகியவற்றின் கீழ் மதுரை மாவட்டம், மாநகா்ப் பகுதிகளுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தத் தடை உத்தரவு பிப். 4-ஆம் தேதி இரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டது.

இதையும் படிக்க: சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு இன்று(பிப். 4) ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவிற்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் செல்லக் கூடாது என்றும் படிக்கட்டு பாதையைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் தலைமையில் துணை ஆணையா்கள் ஆகியோா் மேற்பாா்வையில் 800-க்கும் மேற்பட்ட போலீஸார் திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் பதுங்கு குழிகள் வெடி வைத்து தகர்ப்பு!

பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் மோதல்காரர்களின் 30க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் அதிகாரிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.வடமேற்கு பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் தொடர் மோதல்களிலும் தாக்குதல்கள... மேலும் பார்க்க

மெட்ரோ பணிகள்: மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை 4 மாதங... மேலும் பார்க்க

சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்ட முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 4) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் ... மேலும் பார்க்க

பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!

மகாராஷ்டிரத்தின் ஜால்னா மாவட்டத்தில் பெற்றோர் வீட்டில் 2 மாதங்களாக சங்கிலியால் கட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.ஜால்னாவின் ஆலப்பூர் கிராமத்தில், ஷேனாஸ் (எ) சோனா... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் நீராடிய பூடான் அரசர்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் புனித நீராடினார்.பூடான் நாட்டிலிருந்து லக்னெள விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வருகை... மேலும் பார்க்க

ரூ.24 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்! ஜெர்மானியர் கைது!

கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வைத்திருந்த ஜெர்மன் நாட்டு நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வடக்கு கோவாவில் கடந்த 2024 நவம்பர் ம... மேலும் பார்க்க