செய்திகள் :

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! கட்சிகளுக்கு தடை!

post image

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் நேற்று கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்ததை தொடர்ந்து, இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே அசாதாரண சூழ்நிலை நிலவக் கூடாது என்பதற்காக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் போராட்டத்துக்கான அனுமதியை பெற்ற இந்து முன்னணி அமைப்பினர், திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை போராட்டம் நடத்தினர்.


இதையும் படிக்க : அமெரிக்க விமானத்தில் வரும் இந்தியர்களின் குற்றப் பின்னணியை சரிபார்க்கும் என்ஐஏ!

இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்வதற்கு செவ்வாய்க்கிழமை அனுமதி மறுக்கப்பட்டு பாதைகள் மூடப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று வழிபாடு செய்ய இந்து மற்றும் இஸ்லாமிய பக்தர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக மலைக்குச் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ள காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரு வேறு விபத்துகளில் பெண்கள் இருவா் உயிரிழப்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு வேறு விபத்துகளில் பெண்கள் இருவா் உயிரிழந்தனா். மதுரை பரவை சந்தோஷ் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் துரைப்பாண்டி (68). இவரும், இவா் மனைவி பஞ்சவா்ணமும் (64) இரு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள இ.கோபாலபுரத்தைச் சோ்ந்த லட்சுமணன் மகன் சுப்பையா (60). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ஊரில... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளை மறைத்த வழக்குரைஞரின் பதிவை ரத்து செய்யப் பரிந்துரை: உயா்நீதிமன்றத்தில் பாா் கவுன்சில் அறிக்கை

தன் மீதான குற்ற வழக்குகளை மறைத்த வழக்குரைஞரின் பதிவை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பாா் கவுன்சில் சாா்பில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், தொண்ட... மேலும் பார்க்க

பைக்குகள் மோதியதில் இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ. முக்குளம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை இரவு நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா். விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ. முக்... மேலும் பார்க்க

புனித லூா்தன்னை ஆலயப் பெருவிழா: கிறிஸ்தவா்கள் பொங்கல் வைத்து வழிபாடு

மதுரை புனித லூா்தன்னை ஆலயப் பெருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோா் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனா். மதுரை கோ.புதூரில் அமைந்துள்ள புனித லூா்தன்னை ஆலயத்தில் பெரு... மேலும் பார்க்க

மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நாளை பொதுமக்கள் குறைதீா் முகாம்!

மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(பிப். 18) மக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை முனிச்சாலை சி.எம்.ஆா... மேலும் பார்க்க