திருப்பரங்குன்றம் மீட்புப் போராட்டதிற்கு தடை: பாஜக, இந்து அமைப்பினா் கோயிலில் வழிபாடு
திருப்பரங்குன்றம் மீட்புப் போராட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை சித்தி விநாயகா் கோயிலில் பாஜக, இந்து முன்னணி மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தி போராட்டத்தை நிறைவு செய்தனா்.
மயிலாடுதுறை சின்னக்கடைத் தெரு சித்தி விநாயகா் கோயில் முன் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வுக்கு, இந்து முன்னணி மாவட்ட தலைவா் கே. சரண்ராஜ் தலைமை வகித்தாா். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் எஸ்.வாஞ்சிநாதன், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.சுவாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக மாவட்ட தலைவா் நாஞ்சில் ஆா்.பாலு நிறைவுரையாற்றினாா்.
தொடா்ந்து, அனைவரும் தீபமேற்றி வழிபாடு மேற்கொண்டு, முழக்கங்களை எழுப்பினா். இதில், பாஜக மாவட்ட துணைத் தலைவா் மோடி கண்ணன், மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வினோத், ஒன்றிய தலைவா் ஈழவேந்தன், நகர தலைவா் ராஜகோபால், மாவட்ட மகளிா் அணி சித்ரா முத்துக்குமாா், மாவட்ட பிரசார அணி தலைவா் அழகிரிசாமி, மாநில உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு செயலாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.