திமுக: `கட்சிக்காகதான் பொறுமையா இருந்தேன்’ - நகராட்சி துணை தலைவர் மீது சாதிய வன்...
திருப்பரங்குன்றம் விவகாரம்: ``இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?'' - அமைச்சர் சேகர் பாபு கேள்வி
சென்னையில் இன்று (டிச.6) செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசியிருக்கிறார்.
" திமுக அரசு சட்டத்தை மதிக்கின்ற அரசு. அதுமட்டுமின்றி பக்தர்களின் நலன் காக்கும் அரசாகவும் இருக்கிறது.
இந்த அரசைப் பொறுத்தவரை அனைவரும் சமம். திமுக ஆட்சியில் பிரிவினை ஏற்படாது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை இன்றைக்கு சங்கிகளைத் தவிர்த்து எல்லோரும் ஆதரவு தந்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மலையின் உச்சியில் தீபம் ஏற்றிய பின், மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா?
அதுபோல்தான் திருப்பரங்குன்றத்திலும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?
350 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் மலையின் உச்சத்தில் தீபம் ஏற்றுகிறார்கள்.
அதற்குப் பதிலாக வேறு ஐந்து இடத்தில் தீபம் ஏற்றினால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அது போன்றதுதான் திருப்பரங்குன்றத்தில் நடைபெறுகிறது" என்று பேசியிருக்கிறார்.














