செய்திகள் :

திருமணத்தை மீறிய உறவு; கணவருடன் தனிமையில் இருந்த பெண்ணை கொலை செய்து புதைத்த மனைவி- நடந்தது என்ன?

post image

தூத்துக்குடி, சங்கரப்பேரி ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவர், காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் பிருந்தாதேவி. இவருக்கும் கிருஷ்ணகுமார் என்பவருக்கும் திருமணமாகி 9 வயதில் மகனும்,6 வயதில் மகளும் உள்ளனர். கிருஷ்ணகுமார் குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வெல்டிங் காண்ட்ராக்ட் கம்பெனி நடத்தி வரும் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சரவணப்பிரியா. இவர்களுக்கு 10 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட சரவணப்பிரியா

இந்த நிலையில், நேற்று காலையில் இருந்து பிருந்தாதேவியைக் காணவில்லை. இதனால், பிருந்தாதேவியின் தந்தை செல்லதுரை, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், பிருந்தாதேவியின் வீட்டின் முன்பிருந்த சி.சி.டி.வி கேமராபதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை சுமார் 5.30 மணியளவில் மாரிமுத்து தனது வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டிற்குள் செல்வதும், சிறிது நேரத்தில் பிருந்தாதேவி அவரது வீட்டிற்குள் செல்வதும் பதிவாகியிருந்தது.

பின்னர், மாரிமுத்துவின் வீட்டில் இருந்து பிருந்தாதேவி வெளியானதாக எந்த பதிவும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், மாரிமுத்து, அவரது மனைவி சரவணப்பிரியாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிருந்தாதேவையை கொலை செய்து உடலை காரில் ஏற்றி ஓட்டப்பிடாரத்தில் உள்ள தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் புதைத்ததை ஒப்புக்கொண்டனர்.  இதுகுறித்து சிப்காட் போலீஸார், “பிருந்தாதேவியின் கணவர் குவைத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், பக்கத்து வீட்டு மாரிமுத்துவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்தவீடு என்பதால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் வீட்டின் ஒரு அறையில் சரவணப்பிரியா, குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில்,மற்றொரு அறையில் பிருந்தாதேவியும் மாரிமுத்துவும் தனிமையில் இருந்துள்ளனர்.

சிப்காட் காவல் நிலையம்

திடீரென கண் விழித்த சரவணப்பியா இதனை பார்த்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன் கணவரை வெளியே தள்ளி அறையின் கதவை பூட்டிய  சரவணப்பிரியா, பிருந்தாதேவியின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார் சரவணப்பிரியா. பின்னர், மாரிமுத்து மற்றும் தன் தம்பி கார்த்திக்கின் உதவியுடன் பிருந்தாதேவியின் உடலை ஓட்டப்பிடாரம் சிலோன்காலனியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் அவரது உடலை குழி தோண்டி புதைத்துள்ளனர். இதில் காருடன் தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகிறோம்” என்றனர்.   

`ரூ.2.47 கோடி கட்டுங்க; 7 நாள்கள்தான் கெடு’ - ஏழை விவசாயி பெயரில் ஜிஎஸ்டி மோசடி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள வீரிசெட்டிபல்லி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 32). விவசாயியான இவர், கறவை மாடு வளர்ப்பு மூலமாக கிடைக்கும் குறைவான பால் வருமானத்தை நம்பியே பிழைப... மேலும் பார்க்க

ஸ்லீப்பர் பஸ்ஸுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட பெண் - டெல்லியில் பயங்கரம்

நாட்டின் தலைநகர் டெல்லியின் நங்லோய் பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியார் பேருந்துக்குள் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூ... மேலும் பார்க்க

கொலையில் முடிந்த மதுபோதை தகராறு, வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை! - என்ன நடந்தது?

சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான கோகுல். தன்னுடைய நண்பர்களான‌ மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து மது அருந்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஜருகுமலை அடிவாரப் பகுதிக்குச் செ... மேலும் பார்க்க

நெல்லை: விஜய் முதல்வராவதில் ஏற்பட்ட இழுபறி; விரக்தியில் தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழந்த பரிதாபம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளைக் கைப்பற்றிய போதிலும், த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் இழு... மேலும் பார்க்க

நாட்டில் குற்றச் சம்பவங்களின் சதவிகிதம் குறைந்தாலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!

தேசிய குற்ற ஆவண காப்பக தரவவுகளின் அடிப்படையில் குழந்தைகள் உரிமை அமைப்பான 'க்ரை' (CRY) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் ஒட்டுமொத்த குற்றச்சம்பவஙகளின் எண்ணிக்கை 10.8 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: எரிந்த நிலையில் ராணுவ வீரர், அவர் தந்தை உடல்கள் - திருமணம் மீறிய உறவால் நடந்த பயங்கரம்

கிருஷ்ணகிரி அருகே இருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையானது ராணுவ வீரரும் அவர் தந்தை என்பதும், திருமணம் மீறிய விவகாரத்தால் இக்கொலை நடந்துள்ளத... மேலும் பார்க்க