செய்திகள் :

தீராத சொத்து தகராறு; தங்கும் விடுதியில் வியாபாரி குத்திக் கொலை; திருப்பூரில் நடந்தது என்ன?

post image

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரான அமரன், திருப்பூர் பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

பின்னர், அவரது உறவினரான பல்லடம் பகுதியில், பனியன் துணி வியாபாரம் செய்து வரும் செந்தில்நாதன் என்பவரைத் தனது அறைக்கு அழைத்து உள்ளார். அங்கு வந்த செந்தில்நாதனுக்கும், அமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரமடைந்த அமரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செந்தில்நாதன் வயிறு மற்றும் கழுத்தில் குத்தியும், கழுத்தை அறுத்தும் உள்ளார். ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து வெளியே வந்த செந்தில்நாதன் 3-ஆவது மாடியில் அதிக ரத்தம் வெளியேறி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு போலீஸார் கொலை செய்யப்பட்ட செந்தில்நாதனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், "கொலை செய்யப்பட்ட செந்தில்நாதனுக்கும் கொலையாளி அமரனும் உறவினர்கள். இருவருக்கும் இடையே நீண்ட நாள்களாக சொத்து தகராறு இருந்து வந்ததுள்ளது. இன்று அதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று அமரன், செந்தில்நாதனை அறைக்கு அழைத்துள்ளார்.

செந்தில்நாதன்
செந்தில்நாதன்

அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில், அமரன் ஏற்கெனவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில்நாதனின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார்.

அது மட்டுமின்றி அவர் கழுத்தையும் அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் அவரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற செந்தில்நாதன் மூன்றாவது மாடிக்கு வந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அமரன் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்று போலீஸார் தெரிவித்தனர்.

`திருமணமானவருடனான காதலை கைவிட கெஞ்சினேன்' - சேலம் மருத்துவ மாணவி கொலை வழக்கில் தந்தை கைது

சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷின... மேலும் பார்க்க

திருச்சி: 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர்; 58 வயது முதியவர் சிக்கியது எப்படி?

திருச்சி, காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( வயது: 58). சம்பவத்தன்று இவரது வீட்டில் பேரன், பேத்திகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது, உறவினர் ஒருவரது 7 வயது பெண் குழந்தையும் விளையாடுவதற... மேலும் பார்க்க

`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ்

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உர... மேலும் பார்க்க

'இந்த' செய்கைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தான் - நீதிமன்றம் தீர்ப்பு

இன்னும் பலருக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கான வரையறைகள் என்னவென்று தெரிவதில்லை. ஒரு பெண்ணிடம் ஆபாசமாகப் பேசினாலோ, தவறாக நடந்துகொண்டாலோ தான் பாலியல் தொந்தரவுகள் என்று நினைக்கப்படுகின்றன. ஆனால், உண்மையில்... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: பிரேக் அப்பில் முடிந்த இன்ஸ்டா காதல்; போனை பிளாக் செய்த காதலனை குத்திக் கொன்ற காதலி

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஷ்பூர் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் காம்தா பிரசாத்(25). அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.பிரசாத்திற்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரோஷ்னி(22) என்ற பெண்ணின் அறிமுகம் ... மேலும் பார்க்க

தேயிலை தோட்டத்தில் கிழிந்த உடைகள்; வனத்தில் உடல் பாகங்கள் - கோத்தகிரியை உறைய வைத்த பழங்குடி மரணம்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கூவக்கரை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான வெள்ளியங்கிரி. கூலித்தொழிலாளியான இவர் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்திர... மேலும் பார்க்க