செய்திகள் :

தூத்துக்குடி: வீட்டில் நாட்டு வெடிகுண்டு பதுக்கிய கும்பல் கைது; கொலைத் திட்டமா?

post image

தூத்துக்குடியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த கும்பல் ஒன்று தனிப்பிரிவு போலீஸாரிடம் சிக்கியது. அந்த கும்பலிடம் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கும்பலிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கபில்தேவ், அஜித்குமார் ஆகிய இருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், இருவரின் வீட்டிலும் சந்தேகத்தின் பேரில் போலீஸார் சோதனை நடத்தினர்.

தெற்கு காவல் நிலையம்

அப்போது அஜித்குமாரின் மனைவி எஸ்தர் மற்றும் மாமியார் ரீத்தம்மாள் ஆகியோர் வசித்து வரும் வீட்டின் வெளிப்புறத்தில் ஒரு பையில் 8 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து வல்லநாடு மலை அடிவாரத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று, தொழில்நுட்ப ரீதியாக செயலிழக்கச் செய்தனர்.

இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி சீனு என்பவர் உப்பளத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் கபில்தேவ் முதல் குற்றவாளியாக சேர்கப்பட்டார். இதனால் சீனுவின் நண்பரான ஜப்பான் அஜித் என்பவருக்கும் கபில்தேவுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

தெற்கு காவல் நிலையம்

இருவரும் தனித்தனி கும்பலாக செயல்பட்டு வந்துள்ளனர். அஜித் கும்பலை பழிவாங்க கபில்தேவ் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. அஜித்குமார் மீது 8 வழக்குகளும், கபில்தேவ் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.  வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளைபதுக்கி வைத்த சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க