செய்திகள் :

தென்காசி: திருமணத்திற்கு மறுத்த காதலி; பள்ளியின் வாசலில் வைத்து கத்திரிக்கோலால் குத்திய காதலன் கைது

post image

தென்காசியைச் சேர்ந்தவர் சொர்ணம். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது கடையநல்லூர் அருகேயுள்ள ஆய்குடியில் ஒரு தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். நெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், அதே பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார்.

தென்காசி
தென்காசி

இருவரும் உறவினர்கள் என்பதால் நெருங்கிப் பேசி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு சுரேஷின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுரேஷின் குடும்பத்தினர் சொர்ணத்தின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளனர். ஆனால், இவர்களின் உறவு முறையில் வேறுபாடு இருந்ததால் சொர்ணத்தின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.

இதனையடுத்து சொர்ணமும் சுரேஷுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். பலமுறை முயன்றும் சொர்ணம், சுரேஷிடம் பேச மறுத்துள்ளாராம். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், சொர்ணம் பணிபுரியும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று, “உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அதற்கும் சொர்ணம் மறுக்கவே, பள்ளிக்கூட வாசலில் வைத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து சொர்ணத்தின் கழுத்துப்பகுதியில் ஓங்கி குத்தியுள்ளார்.

இலத்தூர்
இலத்தூர்

சொர்ணம் சுதாரிப்பதற்குள் அவரது முதுகு, கை, கால் என 5 இடங்களில் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதனைப் பார்த்த மாணவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.

சக ஆசிரியர்கள், ஊழியர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து இலத்தூர் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

”2 வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை” - செளமியா அன்புமணி காட்டம்

தூத்துக்குடி விமான நிலையத்தில்செய்தியாளர்களைச் சந்தித்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி, “கல்வி, மருத்துவம், சுகாதாரம் எனப் பல துறைகளில் பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பெண்கள் ஒரு நல... மேலும் பார்க்க

சிவகங்கை : கொலை முயற்சி வழக்கில் கைதான இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - காரணம் என்ன?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்​தவர் ஜெயக்​கு​மார். கோழிக்​கடை​யில் வேலை செய்​கிறார். இவரது நண்​பர் ஆதனூரைச் சேர்ந்த அழகர். இவர் உணவகத்​தில் பணிபுரி​கிறார். கடந்த 5-ம் தேதி இரவு இரு​வரு... மேலும் பார்க்க

பக்கத்துவீட்டுப் பெண்ணை அம்மா என அழைத்த மகள்; வாயிலும் கண்ணிலும் மிளகாய்த்தூள் போட்ட வளர்ப்புத் தாய்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள பிவாண்டியின் பாப்காவ் பகுதியில், தனது 3 வயது வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிய 35 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக ப... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: 90 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை; முகமூடி அணிந்து வந்த கும்பலுக்கு வலை

மத்தியப் பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவர் முகமூடி அணிந்த நான்கு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது விவசாய நிலத்தில... மேலும் பார்க்க

கோவை: வாய்க்காலில் மிதந்த ஆண் சடலம்.. திருமணம் மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்; அதிர்ந்த போலீஸ்

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சரண்யா என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சதீஷ் – சரண்யா காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் அண்ம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி திமுக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு; முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது சிறுமி, திமுக நிர்வாகியால் பாலியல் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.... மேலும் பார்க்க