செய்திகள் :

"தெலுங்கு மக்கள் என்னை தமிழ் பொண்ணுன்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க, ஆனா..!"- ஸ்ரீ கௌரி ப்ரியா

post image

'லவ்வர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஸ்ரீ கௌரி ப்ரியா.

சமீபத்தில் தெலுங்கில் இவரது நடிப்பில் 'சென்னை லவ் ஸ்டோரி' படம் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஸ்ரீ கௌரி ப்ரியா 'Hindustan Times' ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

ஸ்ரீ கௌரி ப்ரியா
ஸ்ரீ கௌரி ப்ரியா

அதில் பேசியிருக்கும் அவர், " சின்ன வயசுல தெலுங்கு, தமிழ் படங்களுக்கு இடையில இருக்க வித்தியாசத்த புரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு விவரம் இல்ல.

ஏன்னா இங்க நிறைய படங்கள் டப் ஆகிதான் வரும். எனக்கு பிடித்த படங்கள்ல நிறைய தமிழ் டப்பிங் படங்கள் தான் இருந்துச்சு.

தமிழ்ல இருந்து தெலுங்குக்கு டப் ஆன நிறைய பாடல்களை பாடுவேன். கொரோனா ஊரடங்கு சமயத்துலத்தான் படங்களை அந்தந்த மொழிகளிலேயே பார்க்க ஆரம்பிச்சேன்.

அதுதான் என்னை தமிழ் சினிமாவுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு வந்துச்சு.

தமிழ் என்னோட தாய்மொழி கிடையாது. படப்பிடிப்பின் போது தமிழிலேயே பேச ஆரம்பிச்சேன். என்னோட ரெண்டாவது படத்துக்குள்ளேயே என்னால வசனங்களை நல்லா புரிஞ்சுகிட்டு பேசுற அளவுக்கு மொழியைக் கத்துக்கிட்டேன்.

நிறைய தெலுங்கு மக்கள் என்னை தமிழ்நாட்ல இருந்து டோலிவுட்டுக்கு வந்த தமிழ் பொண்ணுன்னு தான் நினைச்சுகிட்டு இருக்காங்க.

ஸ்ரீ கௌரி ப்ரியா
ஸ்ரீ கௌரி ப்ரியா

ஆனா உண்மை அது கிடையாது. நான் தமிழ்ல கொஞ்சம் நல்லா நடிச்ச ஒரு தெலுங்கு பொண்ணு அவ்வளவுதான்.

தமிழ் மக்களும் என்னை அவங்கள்ல ஒருத்தரா ஏத்துக்கிட்டு, நான் தமிழ் பேசுற திறமையைப் பார்த்து ஆச்சர்யப்படுறாங்க.

இது எனக்கு ரொம்ப பெருமையாவும், இன்னும் சிறப்பாக செயல்பட ஊக்கமாவும் இருக்கு" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Varun Tej: "நீ வந்த பின்தான்... அன்பையே நான் கண்டிருக்கிறேன்!"- குழந்தை பற்றி வருண் - லாவண்யா தம்பதி

நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி தம்பதிக்குக் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குக் கடந்தாண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. Varun Tej - Lavanya Tripathi's Sonத... மேலும் பார்க்க

Allu Arjun: "சேலை அணிந்து நடிக்க வேண்டும் என பயமாக இருந்தது; ஆனால்..." - அல்லு அர்ஜுன்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி பேன்-இந்தியா ஹிட் அடித்திருந்தது ‘புஷ்பா 2' திரைப்படம். அப்படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுனின் மார்க்கெட் மற்ற சினிமாக்களிலும் அதிகரித்திருக்கிறது. புஷ்பா 2இத்தி... மேலும் பார்க்க

``காதலித்தேன்... தோல்வியடைந்தேன்... மதுகுடித்தேன்..." - பர்சனல் பகிர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா 'Romanchakam' என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். செப்டம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்க... மேலும் பார்க்க

`நடிக்க வாய்ப்பளிப்பதாக பொய் வாக்குறுதி' - பாலியல் வன்கொடுமை புகாரில் இயக்குநர் பவன் சதினேனி கைது

திருமணம் செய்து கொள்வதாகவும், சினிமாவில் வாய்ப்பு தருவதாகவும் கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பவன் சதினேனியை கோல்கொண்டா காவல்துறையினர் கைது செய்த... மேலும் பார்க்க

Nepal Flood: "பயமாகவும், மனவேதனையாகவும் இருக்கிறது" - நடிகை ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் உருக்கம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயின. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில்... மேலும் பார்க்க

Irumudi: "என் சினிமா போராட்டங்கள் 90-களில் சென்னைலதான் தொடங்கியது!" - சென்னையில் ரவி தேஜா

ரவி தேஜா நடித்திருக்கும் 'இருமுடி' படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த டோலிவுட் படத்தினை 'நின்னு கோரி', 'குஷி' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சிவா நிர்வானா இயக்கியிருக்கிறார். Irumudi -... மேலும் பார்க்க