செய்திகள் :

`தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவது பற்றி பேச பட்னாவிஸுக்கு என்ன உரிமை இருக்கிறது?'- சரத் பவார் கேள்வி

post image

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 28-ம் தேதி மாநில துணை முதல்வர் அஜித் பவார் திடீரென விமான விபத்தில் காலமானார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். இது குறித்து சரத் பவாரிடம்கூட சுனேத்ரா பவார் கருத்து கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை சரத் பவாரே குறிப்பிட்டு இருந்தார். தற்போது தேசியவாத காங்கிரஸின் இரண்டு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் இணைவதாக இருந்தால் அது குறித்து பா.ஜ.கவிடம் பேசவேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்றது மற்றும் கட்சியின் இரு அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் அளித்த பேட்டியில், ''சுனேத்ரா பவார் துணை முதல்வரானதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

பட்னாவிஸ்

ஆனால் அஜித் பவாரின் உடல் தகனம் செய்யப்பட்ட வித்யா பிரதிஷ்தான் கல்வி வளாகத்தில் அவருக்கு நினைவகம் கட்டுவது குறித்து எனக்கு தெரியாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணைவது குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதில் தேவேந்திர பட்னாவிஸுக்கோ அல்லது பா.ஜ.க-விற்கோ எந்த தொடர்பும் கிடையாது.

தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. அது பற்றி பேச அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இப்போது எந்த ஓர் அரசியல் முடிவு குறித்தும் ஆலோசிக்கப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் எந்த முடிவையும் சொந்தமாக எடுக்கும்'' என்று தெரிவித்தார். இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் ஏற்கெனவே மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட்டு வருகின்றன. அதோடு வரும் நாளை நடக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலில் இரு அணிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றன.

India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க

`துரோகி நண்பா.. டோன்ட் வொர்ரி!'- ராகுல் - மத்திய இணை அமைச்சர் இடையே நடந்த வாக்குவாதம்! | Viral Video

2020-ல் இந்தியா - சீனா இடையே நடந்த ஃபேஸ்-ஆஃப் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய `Four Stars Of Destiny'என்ற புத்தகத்தைக் கையிலெடுத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ... மேலும் பார்க்க

வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, எந்த தொகுதி யாருக்கு என்பது குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். தஞ்சாவ... மேலும் பார்க்க

திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!

திருநெல்வேலி சந்திப்பு அருகிலிருக்கும் இரட்டைப் பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்த சமுதாய நலக்கூடமானது அதற்கு முன்னிருக்கும் கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்... மேலும் பார்க்க

`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது' பூதாகரமாக்கிய அண்ணாமலை - விலகல் அறிவிப்பின் பின்னணி!

சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியிர... மேலும் பார்க்க

"ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?" - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்த... மேலும் பார்க்க