செய்திகள் :

தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவுகளில் வழக்கு

post image

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவரது மகன் சூரியநாராயணன் பிஇ படித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்திக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பி.ஆர்.ஒ-வாகப் பணியாற்றிய சண்முகசுந்தரம், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

அப்போது சண்முகசுந்தரம், தனக்கு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைத் தெரியும் என்றும், பணம் கொடுத்தால் உங்களுடைய மகனுக்கும் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் சாந்தியிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய சாந்தி கடந்த 09.09.2021 முதல் 10.11.2021 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தவணைகளாக சண்முகசுந்தரம் தம்பதியிடம் 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

இதேபோல் வேலை வாங்கித் தருவதாகக் கூறி செல்லத்தம்பி என்பவரிடம் ரூ. 4 லட்சம், பவித்ராவிடம் ரூ. 4 லட்சம், பழனிக்குமாரிடம் ரூ. 12 லட்சம் மற்றும் முத்துப்பாண்டியிடம் ரூ. 4 லட்சம் வாங்கி மொத்தம் 74 லட்சம் ரூபாயை அந்தத் தம்பதி வசூலித்துள்ளனர்.

FRAUD
FRAUD

பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராததால் இது குறித்து சண்முகசுந்தரத்திடம் கேட்டபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாந்தி, உடனே தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

அவரது உத்தரவின் பேரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தம்பதியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்துக் கழக பி.ஆர்.ஒ-வாக வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அ... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு - கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த ... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் மிரட்டல், படுகொலை: சேனா வேட்பாளருக்கு கத்திக்குத்து, எதிர்க்கட்சி நிர்வாகி படுகொலை!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி, சிவசேனா(உத்தவ்) கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் ... மேலும் பார்க்க

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ... மேலும் பார்க்க