செய்திகள் :

தேயிலை தோட்டத்தில் கிழிந்த உடைகள்; வனத்தில் உடல் பாகங்கள் - கோத்தகிரியை உறைய வைத்த பழங்குடி மரணம்!

post image

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கூவக்கரை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான வெள்ளியங்கிரி. கூலித்தொழிலாளியான இவர் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். கடந்த மாதம் 29 - ம் தேதி கோத்தகிரி அருகில் உள்ள அரவேணு பகுதிக்கு கூலி வேலைக்குச் சென்ற இவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் வெள்ளியங்கிரியை கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அரவேணு பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் அவரின் உடைகள் கிழிந்த நிலையில் கிடைப்பதைக் கண்டறிந்துள்ளனர். வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அருகில் இருந்த வனப்பகுதியில் வெள்ளியங்கிரியின் தலை, கை உள்ளிட்ட உடல் பாகங்கள் தனித்தனியாக கிடப்பதைக் கண்டறிந்துள்ளனர். அழுகிய நிலையில் காணப்பட்ட உடல் பாகங்களை மீட்டு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். எஞ்சிய உடல் பாகங்களை தேடும் பணியில் இரு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

உடல் பாகங்கள் மீட்பு

பின்னணி குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி ஒருவர், "வெள்ளியங்கிரியின் உடல் பாகங்கள் கிடந்த பகுதியில் சிறுத்தையின் கால் தடங்கள் காணப்பட்டுள்ளது. சிறுத்தை தாக்கியதில் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே உறுதியான முடிவுக்கு வர முடியும். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரின் உடல் பாகங்கள் வனப்பகுதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், கோத்தகிரியை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க