SIR: திமுக முதல் மநீம வரை எதிர்ப்பு; சொல்லும் காரணங்களும், விமர்சனங்களும் என்னென...
``தைவானை தாக்கினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கே தெரியும்" - சீனாவை எச்சரித்த ட்ரம்ப்
31-ம் தேதி தென் கொரியாவில் ஆசியா - பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தென் கொரியா சென்றிருந்தனர். அப்போது இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர்.
அமெரிக்க அதிபரின் சீனா பொருள்கள் மீதான வரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசுபொருளான நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
இந்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா சென்ற அதிபர் ட்ரம்ப், தனியார் செய்தி நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நேர்காணலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
அப்போது,``சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவில் உள்ள மக்களும் தைவானை தாக்கினால், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அறிந்திருக்கிறார்கள்' என்றார்.
சீனா தைவான் மீது இராணுவ ரீதியாக நடவடிக்கை எடுத்தால் அமெரிக்க இராணுவம் அதில் தலையிடுமா என்றக் கேள்விக்கு, ``எனது ரகசியங்களை வெளியிட முடியாது. இது நடந்தால் அது நடக்கும் என உங்களுக்கு என்னால் தெளிவாக சொல்ல விரும்பவில்லை.
நீங்கள் கேள்வி கேட்பதால் மட்டும் நான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்பவன் அல்ல. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதை சீனா புரிந்துகொள்கிறது.
சீன அதிபர் மக்களிடம் உரையாற்றும்போது வெளிப்படையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிபராக இருக்கும்வரை நாம் எதுவும் செய்ய மாட்டோம்' எனக் கூறியிருக்கிறார்." என்றார்.
ஆனால் சமீபகாலமாக சீனா விரிவான இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது. கிட்டத்தட்ட தினமும் தைவானின் வான்வெளிக்கு அருகில் போர் விமானங்களை அனுப்புகிறது.

தைவான் ஜலசந்தியில் சாத்தியமான மோதல் குறித்த அச்சங்களை அதிகரித்துள்ளது என தி எபோக் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
2027 ஆம் ஆண்டுக்குள் சாத்தியமான படையெடுப்பிற்கு தயாராகுமாறு சீன இராணுவத்தை ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையும் மதிப்பீட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

















