செய்திகள் :

'தொழில் வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விட 25 ஆண்டுகள் அட்வான்ஸாக சிந்திக்கிறோம்' - மு.க.ஸ்டாலின்

post image

கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் 'TN Rising' முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து 15 முறைக்கு மேல் கோவைக்கு வந்திருக்கிறேன். நான் அதிகமாக விசிட் செய்த மாவட்டம் கோயம்புத்தூர் தான்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தொலைநோக்குப் பார்வையுடன், மற்ற மாநிலங்களுக்கு 25 ஆண்டுகள் அட்வான்ஸாக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுவரை 17 முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. சுமார் 34 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

அதற்கு இங்கு தொழில் செய்ய நல்ல சூழல், வெளிப்படையான அரசு நிர்வாகம், சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதுதான் காரணம். தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள், அரசியல் காரணங்களுக்காக தவறான செய்திகளை பரப்புகிறார்கள். கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகளை பார்த்து அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

முதலீடு | Investment

தொழில் முதலீடுகளை கொண்டு வருவது சாதாரண விஷயமில்லை. இந்திய மாநிலங்கள் மட்டுமல்ல, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் போட்டிப் போட்டு இந்த முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்கின்ற திட்டங்களுக்கு, எந்த தாமதமும் ஏற்படாது. எந்த தலையீடும் இருக்காது. கோவை வாரப்பட்டியில், ‘பாதுகாப்புத் துறை உபகரணங்கள் பூங்கா’ அமைத்திருக்கிறோம். சூலூரில், 200 ஏக்கர் பரப்பளவில், ‘வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் பூங்கா‘ அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

கோவை
கோவை

கணியூர் மற்றும் ராசிபாளையத்தில், ‘பன்முகப் போக்குவரத்து பூங்கா’வை அமைக்கப் போகிறோம். சூலூர் மற்றும் பல்லடத்தில், ‘செமிகண்டக்டர் பூங்கா’ அமைக்கப் போகிறோம். இன்று மட்டும் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 43,844 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன." என்றார்.

ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடைகள்

ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் எப்போதும் தனது சிறந்த கைவினைப் பணியைத் தாண்டிய மதிப்புகளை நிலைநிறுத்தி வருகிறது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி ... மேலும் பார்க்க

GRT: வியப்பூட்டும் சலுகைகள்; 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்'- அறிமுகப்படுத்திய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்

வியப்பூட்டும் சலுகைகளுடன் பிரம்மாண்டமான 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்' -ஐ ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது.ஜி.ஆர்.டி ஜூவல்லரஸ், 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் மதிப்புமிக்க நக... மேலும் பார்க்க