செய்திகள் :

நடுரோட்டில் இளம்பெண் சுட்டுக்கொலை; விபரீதத்தில் முடிந்த முக்கோணக் காதல்; பெண் கைதான பின்னணி என்ன?

post image

மும்பை கோவண்டி பகுதியைச் சேர்ந்த ஷிபாஷேக் (19) என்ற பெண் தனது வீட்டில் இருந்து மாலை நேரத்தில் தேநீர் அருந்துவதற்காக வெளியில் வந்தார். அப்பெண்ணை யாரோ மர்ம நபர் துப்பாக்கியால் அருகில் இருந்து சுட்டனர்.

இதில் அப்பெண் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனே இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அவரை அருகில் உள்ள சதாப்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

துப்பாக்கி
துப்பாக்கி

ஆனால் அவரைச் சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அப்பெண்ணின் நெஞ்சு, கழுத்துப் பகுதியிலும், தலையிலும் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்திருந்தன.

அப்பெண்ணிற்கு அருகில் நின்று யாரோ சுட்டிருக்கவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றப்பிரிவு போலீஸாரும் தனியாக விசாரித்தனர்.

முக்கோண காதலால் கொலை

போலீஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதியைச் சேர்ந்த குட்டு(23) என்பவரைக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. குட்டுவை அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணும் விரும்பியதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக இரு பெண்களுக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இம்மோதல் காரணமாகவே ஷிபா ஷேக் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக குட்டு மற்றும் 25 வயது பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 வயது பெண் துப்பாக்கியால் சுட்டாரா அல்லது வேறு யாரையாவது நியமித்து இத்துப்பாக்கிச்சூட்டை நடத்தினாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இத்துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்த சாட்சி எதுவும் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர். ஷிபா ஷேக் போனை வாங்கி ஆய்வு செய்து வரும் போலீஸார் அவரின் தோழிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டுவிற்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

கொலை
கொலை

இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் சமீர் ஷேக் கூறுகையில், குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

25 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷிபா ஷேக்கை நேரில் சந்தித்து குட்டுவிடமிருந்து விலகி இருக்கும்படி கூறி வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

நீலகிரி: எகிறும் தங்கம் விலை; சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் பக்கம் திரும்பிய கேரள மாஃபியா கும்பல்!

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கிழக்கிந்திய கம்பெனி மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள்‌, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் ... மேலும் பார்க்க

ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டும் பிஷ்னோய் கேங்க்! - பாதுகாப்பு அதிகரிப்பு

குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தான். அதோடு சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமான மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை ல... மேலும் பார்க்க

சென்னை: தாய் தற்கொலை; மருத்துவமனையில் மகன் - வெளிநாட்டிலிருந்து வந்ததும் விபரீத முடிவு!

உத்தரப்பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்தவர் நீராஜ் ஜெயின். இவர், சென்னையில் டிராக்டர் கம்பெனியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சோனாலி. இந்தத் தம்பதியினருக்கு கிஷிதிஜ் என்ற மகன் உள்ளார். இ... மேலும் பார்க்க

விழுப்புரம்: `கரண்ட் வேணும்னா ரூ.4,000 ஃபீஸ்’ - மின்துறை அதிகாரி கையும் களவுமாக கைதானது எப்படி?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கும் நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றைக் கட்டினார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ரெட்டண... மேலும் பார்க்க

ஆந்திரா: திருடிய பணத்தில் சொகுசு கார், வெளிநாட்டுப் பயணம்; வெளியான எஞ்சினியரின் ரகசிய வாழ்க்கை

ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பூட்டை உடைத்து திருட்டு நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்துகொண்டே இருந்தன. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன.இது ... மேலும் பார்க்க