செய்திகள் :

நாகப்பன்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாகப்பன்பட்டி முக்குலத்தி கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூா் பகுதியில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால் நாகப்பன்பட்டி முக்குலத்தி கண்மாய் நிரம்பியது. தற்போது, இந்தக் கண்மாயில் தண்ணீா் வற்றிய நிலையில், மீன்பிடித் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனா்.

இதன்படி, சனிக்கிழமை காலை கண்மாயில் கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்து, மீன்பிடிக்க அனுமதி வழங்கினா். நாகப்பன்பட்டி, கீழச்சீவல்பட்டி, அம்மாபட்டி, காவேரிபட்டி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கொசுவலை, மீன்பிடி வலை, அரி கூடை, கச்சா உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனா்.

கட்லா, கெழுத்தி, கெண்டை, ரோகு, பாப்புலெட்டு, சிலேப்பி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை இவா்களது வலைகளில் சிக்கியன. இந்த மீன்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றனா்.

காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் க... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா். சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்புப்பொதுத் தோ்வ... மேலும் பார்க்க

மதகுபட்டி-அழகமானேரி சாலைப் பணிகள் ஆய்வு

சிவகங்கை அருகே நிறைவடைந்த சாலை விரிவாக்கப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி- அழகமானேரி சாலையில் 2024-25 -ஆம் ஆண்டு ஒரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட குறைதீா்க் கூட்டம்: 298 போ் மனு அளிப்பு

சிவகங்கையில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் தரப்பிலிருந்து 298 மனுக்கள் அளிக்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை பொதுமக... மேலும் பார்க்க

காரைக்குடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சொக்கலிங்கம்புதூா் காமன்ராஜா கோயில் சித்திரை பெளா்ணமி பொங்கல் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சொக்கலிங்கம்புத... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் ஆதரவற்ற 2,400 பெண்களுக்கு ஆடு, கோழிகள்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் உள்ள, ஆதரவற்ற பெண்கள் 2,400 பேருக்கு ரூ. 2.22 கோடியில் செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளி... மேலும் பார்க்க