செய்திகள் :

``நானே பெரிய ரவுடி என் மனைவிக்கு மெசேஜ் அனுப்புறியா?” - ரவுடி தாக்கியதில் உயிரிழந்த கொரியர் ஊழியர்

post image

கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி, கீழத்தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி (31) திருமணமாகாத இவர், கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார்.

மருதாநல்லுார், கரிகுளத்தெருவைச் சேர்ந்தவர் சிபி சக்கரவர்த்தி. ரவுடியான இவரின் பெயர் போலீஸார் ரவுடி பட்டியலில் உள்ளது. கண்காணிக்கப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட ரவுடி சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது நண்பர்கள்
கைது செய்யப்பட்ட ரவுடி சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது நண்பர்கள்

இந்நிலையில், சிபி சக்கரவர்த்தியின் மனைவிக்கு புகழேந்தி கொரியர் டெலிவரி செய்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது முதல் அவர் செல் நம்பரை சேவ் செய்து வைத்து கொண்டு வாட்ஸ்அப்-பில் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், `நீ ரொம்ப அழகாக இருக்கிறாய், ஐ லவ் யூ' என்று அனுப்பியுள்ளார். இதை தனது கணவர் சிபி சக்கரவர்த்தியிடம் சொல்லியுள்ளார்.

உடனே, ஆத்திரமடைந்த சிபிசக்கரவர்த்தி (33) தனது நண்பர்கள் சிலருடன் சென்று, கடந்த 8ம் தேதி, சிவபுரம் புறவழிச் சாலையில் புகழேந்தியிடம் பேசியுள்ளார். அப்போது நானே பெரிய ரவுடி என் மனைவிக்கு மெசேஜ் அனுப்புகிறாயா என்று கேட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் புகழேந்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தன் வீட்டில் கேட்டதற்கு நாய் குறுக்கே வந்து கீழே விழுந்துட்டேன் என கூறி தாக்கியதை மறைத்து விட்டார்.

இதையடுத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். புகழேந்தியை பரிசோதனை செய்த டாக்டர், இவர் விழவில்லை, யாரோ அடித்திருக்கிறார்கள் என அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, அவரது உறவினர்கள் புகழேந்தியை விசாரித்த போது, நடந்தவற்றை சொல்லியுள்ளார்.

உயிரிழந்த புகழேந்தி
உயிரிழந்த புகழேந்தி

இதற்கிடையில் உடல்நிலை மோசமான நிலையில், புகழேந்தியை, கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, புகழேந்தி உயிரிழந்தார்.

இது குறித்து, அவரது உறவினர்கள், நாச்சியார்கோவில் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சிபிசக்கரவர்த்தி, இதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன்(26), கும்பகோணம், மேல கொட்டையூரைச் சேர்ந்த கிருஷ்ணா(33), கும்பகோணம், முல்லை நகரைச் சேர்ந்த விக்னேஷ்(26), திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியை சேர்ந்த குபேரன்(27) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிபிசக்கரவர்த்தி ரவுடி பட்டியலில், இருப்பதால் இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"நன்றி திருவனந்தபுரம்"- சிபிஎம் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக; வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றன. 14 வருவாய் மாவட்டங்களில் 14 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 6 மாநகராட்சி மேயர்கள், 86 நகராட்சி தலைவர்கள்... மேலும் பார்க்க

`சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல்' - கார்திக் சிதம்பரம் கருத்து!

யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (டிசம்பர் 13) அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்திக் சிதம்பரம். கார்த... மேலும் பார்க்க

'மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத்தை விஞ்சிய தமிழ்நாடு ' - ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு 'மொத்த உள்மாநில உற்பத்தியில்' முதல் இடத்தைப் பிடித்துள்ளது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்."வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம... மேலும் பார்க்க

தமிழ்நாடு வரும் அமித் ஷா; இறுதி முடிவை ஒத்திவைக்கும் ஓ.பன்னீர்செல்வம் - என்ன நடக்கிறது?

அமித் ஷா வருகிற 15-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஆனால், அவர்‌ வருவதற்கான சிக்னல்கள் இப்போதே தமிழ்நாட்டில் தெரிகிறது.தற்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட... மேலும் பார்க்க

”கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் எனச் சொல்லி பலர் வந்துள்ளனர்” - திருமாவளவன்

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்... மேலும் பார்க்க

`தாங்க முடியாத துர்நாற்றம்; இதுதான் சர்வதேச விமான நிலையமா?' - ப.சிதம்பரம் ஆவேசம்

சென்னை விமான நிலையம் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சென்னை விமான நிலையத்தின் 4-வது முனைய... மேலும் பார்க்க