செய்திகள் :

'நான் இடைதேர்தலில் போட்டியிட மாட்டேன்; எனக்கு அமைச்சர் ஆக ஆசை இல்லை' - விஜயிடம் கூறிய திருமா|Today News Live Updates

post image

திருச்சி கிழக்கில் திருமா போட்டியா?

தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதியான திருச்சி கிழக்கில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடலாம். அதில் வென்றால், அவர் தமிழ்நாட்டு அமைச்சரவையில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிற பேச்சுகள் எழுந்தன.

அந்தப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருமாவளவன், "100 சதவிகிதம் சொல்கிறேன். நான் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். அதற்கான வாய்ப்பில்லை.

அதனை ஏற்கெனவே முதல்வர் விஜயிடம் கூறிவிட்டேன். அதில் எனக்கு உடன்பாடில்லை. அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை" என்று கூறியுள்ளார்.

திருமாவளவன், விஜய்
திருமாவளவன், விஜய்

இன்று தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடக்கும் முக்கியமான அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இந்த Live Blog-ல் இணைந்திருங்கள்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க