'தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக மாற்றும் 'விஜய் மாடல் அரசு'- முதல்வரை ஏகத்துக்கும் ...
`நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண்
மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார்.
அதன் பின் செய்தியாளார்களை சந்தித்து பேசிய இளம்பெண், “ கடந்த 2023 ஆம் ஆண்டு மதுரை காளவாசல் பகுதியில் லிங்கதுரை என்பவரது நிறுவனமான P.M.டவர்ஸ் என்ற தங்குவிடுதி ஒன்றில் அலுவலக வரவேற்பாளராக பணியில் சேர்ந்தேன். தாய், தந்தை இல்லாத நிலையில் என்னுடைய உறவினர்களின் வீட்டில் தங்கி தான் வேலைக்கு சென்றுவந்தேன்.
நிறுவனத்தின் ஓனரான லிங்கதுரை (45) என்னை அடிக்கடி திருமணம் செய்து கொள்கிறேன் என கூறுவார். நான் அவரை ‘அப்படி சொல்லாதீர்கள்’ என கண்டித்து வந்தேன். கடந்த 2024 ஆம் ஆண்டு கலெக்சன் பணத்தை எடுத்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வருமாறு லிங்கதுரை கூறினார். `நான் வீட்டிற்கு வர மாட்டேன்' என்றபோதும், `நான் வீட்டில் குடும்பத்தோடு தான் இருக்கிறேன் தையரியமாக வரலாம்' என சொன்னார்.
இதனை நம்பி அவருடைய வீட்டிற்கு சென்றேன். அவருடைய வீட்டில் லிங்கதுரையும், அவருடைய உறவினரான சூரஜ் ஆகிய இருவரும் கொடுத்த தண்ணீரை குடித்ததும், நான் மயக்கமடைந்துவிட்டேன். அந்த சமயத்தில் என்னை நிர்வாணப் புகைப்படம் எடுத்ததோடு, பாலியல் துன்புறுத்தலும் செய்தனர்.
மறுநாள் காலையில் என்னை அலுவலகத்திற்கு வரவழைத்து லிங்கத்துரையின் செல்போனில் அவர் எடுத்த ஆபாச புகைப்படம் எடுத்து வைத்துள்ளதை காட்டி, சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்தார். அடிக்கடி ஆபாசமாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதோடு அடியாட்களை வைத்து என்னை மிரட்டினார்.

`என்னை விட்டு விடுங்கள்' என்று கேட்டதற்கு, , ‘நான் எனது மனைவியை விவகாரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என லிங்கதுரை கூறினார்.
பின்னர் திடீரென்று ஒருநாள் அவர் என்னிடம் "பெங்களூருவில் ஐ போன் ஷோரும் புதியதாக திறக்கவுள்ளதாகவும், நான் சொல்லும் நபர்களிடமும், எனது நண்பர்களிடமும் நீ உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதற்கு உயிருக்கு பயந்து லிங்கதுரை நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லாமல் உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தங்கினேன். நான் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து லிங்கத்துரை ரெளடிகள் மூலமாக மிரட்டல் விடுத்தார்.
கடந்த ஏப்ரல் 30 தேதியன்று மதுரை பைபாஸ் சாலையில் நான் நடந்து வந்தபோது, லிங்கத்துரை மற்றும் அவருடைய அடியாட்களும் வலுக்கட்டாயமாக என்னை கடத்தி சென்று 4 நாட்களாக லிங்கதுரை வீட்டில் அடைத்துவைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.
காவல்துறை உதவி எண் 100-க்கு போன் செய்த பின்னர் காவல்துறையினர் வந்து முறையாக விசாரணை நடத்தாமல் என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

லிங்கத்துரை, சூரஜ் ஆகியோரால் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்ததின் அடிப்படையில் கடந்த மே -16 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் வழக்குப்பதிவு செய்தும் லிங்கதுரை, சூரஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு அவருடைய அடியாட்கள் என்னை பின் தொடர்ந்து வருகிறார்கள். எனக்கும் எனது உறவினர்கள், குடும்பத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். என்னை பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறார் என மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றபோது ஆய்வாளர் மீனா, லிங்கதுரைக்கு ஆதரவாக பேசினார் . மேலும் பணத்தை வாங்கி கொண்டு வழக்கை திரும்பப் பெறுமாறு கூறுகிறார்.

பாதிக்கப்பட்ட எனக்கு ஆதரவாக இல்லாமல், லிங்கதுரைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். பாதுகாப்பு கருதி சிங்கப் பெண் படை மற்றும் காவல்துறையினர் அவசர உதவிக்கு தொடர்பு கொண்டபோது எந்தவித பதிலும், அளிக்காமல் தொடர்ந்து தாமதப்படுத்தினர். எனக்கு உயிருடன் வாழ ஆசையாக இருக்கிறது. ஆனால் லிங்கதுரை மற்றும் அவரது ஆட்கள் என்னை எப்படியும் கொலை செய்து விடுவார்கள் என்ற பயம் இருந்து கொண்டே இருக்கிறது. தமிழக முதலமைச்சர் விஜய் என்னை போன்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.




















