செய்திகள் :

``நான் தமிழனே இல்லை; என் பெயர் திருமாவளவன் இல்லை எனப் பிரசாரம் செய்கிறார்கள்" - திருமாவளவன்

post image

கடலூரில் விசிக சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ``ஆரம்பக் காலத்தில் (90-களில்) விசிகவின் கருத்துக்கள் மீது போதிய ஊடக வெளிச்சம் விழவில்லை. பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ கட்சியின் செய்திகள் வராது; எப்போதாவது ஒரு சிறு செய்தி அல்லது சில நொடிகள் காட்சி ஒளிபரப்பானால் கூட அதைப் பெருமகிழ்ச்சியோடு சேகரித்து வைத்த காலம் அது.

ஆனால் இன்றைக்கு, சிறுத்தைகளைப் பற்றிப் பேசாத ஊடக விவாதங்களே இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது. "திருமாவளவன் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "ஏன் இப்படிப் பேசினார்?", "ஏன் இந்த முடிவை எடுத்தார்?" எனத் தொடர்ந்து பல நாள்களுக்கு விவாதங்கள் நடக்கின்றன.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்த அங்கீகாரமும் முக்கியத்துவமும் தானாக வந்துவிடவில்லை. இது தொய்வில்லாது, இடைவிடாது நாங்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைச்சல் ஆகும்.

அரசியல் பகையாலும், சாதி வெறியாலும் அற்பர்கள் சிலர் என் மீது தொடர்ந்து அவதூறுகளைப் பொழிந்து வருகிறார்கள். நான் தமிழனே இல்லை என்றும், என் பெயர் திருமாவளவன் இல்லை என்றும் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளரான காலமாகிவிட்ட எனது ஆசிரியரின் மாணவர் 'திருமாவளவன்' என்பவரின் சாதி அடையாளத்தை என் மீது பலவந்தமாகத் திணித்து, பா.ம.க-வினர் போன்றோர் மேடைகளில் பேசி வருகிறார்கள்.

சாதியை ஒழிப்பதே மக்கள் விடுதலை என்று இயங்கும் நாங்கள், சமூக ஊடகங்களில் எங்களின் சாதிச் சான்றிதழைக் காட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை எவர் எந்தச் சாதிப் பெயரைச் சொல்லி அழைத்தாலும், எத்தனை முறை அவதூறு பரப்பினாலும் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.

திருமாவளவன்
திருமாவளவன்

ஏனென்றால், சாதியக் கட்டமைப்பில் எனக்கு உடன்பாடு கிடையாது. நாங்கள் 'ஆண்ட பரம்பரை' என்று போலிப் பெருமை பேசும் கும்பல் அல்ல.

நாங்கள் ஞான வம்சத்தைச் சார்ந்தவர்கள்; அறிவுப் பரம்பரையைச் சார்ந்தவர்கள். ஐயன் திருவள்ளுவரின் வழித்தோன்றல்களாகவும், கௌதம புத்தரின் கருத்தியல் வாரிசுகளாகவும் களத்தில் நிற்பவர்கள். சாதி ஒழிப்பைத் தூக்கிப் பிடிப்பவனுக்கு சாதியால் பெருமையும் இல்லை, சாதியால் இழிவும் இல்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்." என்றார்.

TVK: லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி? ``இதுதான் ஊழல் ஒழிப்பு லட்சணம்" - சாடும் டிடிவி தினகரன்

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சித் தலைவரும், த.வெ.க நிர்வாகியுமான வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.முதல்வர... மேலும் பார்க்க

"2 மணி நேரம் பயணம்; கையூட்டு இல்லை; அந்தக் காவலர்தான் உண்மையான ஹீரோ!" - நெகிழும் அண்ணாமலை

நாளைய பத்திரிகையாளர்களை உருவாக்கும் விகடன் குழுமத்தின் கனவுத் திட்டமான 'மாணவப் பத்திரிகையாளர்' திட்டத்தின் கூட்டுப் பயிற்சி முகாம், ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. மாந... மேலும் பார்க்க

நலங்கிள்ளியின் ’ஆர்எஸ்எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்' நூலுக்கு தடை விதிக்க கோரிக்கை – காரணம் என்ன?

கோவை புத்தகத் திருவிழா வருகின்ற 17ம் தேதியன்று துவங்க உள்ளது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த எதிர் வெளியீடு சார்பில், மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதிய ’ஆர்.எஸ்.எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன... மேலும் பார்க்க

TNRERA கலைப்பு: 6 மாதங்களுக்கு இடைக்கால நிர்வாகம்! - வீடு வாங்குபவர்களுக்கு பாதிப்பு இருக்குமா?

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமான `TNRERA' அமைப்பை தமிழக அரசு உடனடியாக கலைத்து, அதன் அதிகாரங்களை மேற்கொள்ள இடைக்காலமாக மூன்று பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பாஜக கூட்டணியில் சேரும் சரத்பவார்?முதல்வருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

மகாராஷ்டிராவில் முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. 2023ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிரிந... மேலும் பார்க்க