செய்திகள் :

நிஜ வாழ்க்கையில் இணைந்த 'கொஞ்சம் நடிங்க பாஸ்' ஆதவன் - விலாசினி!

post image

தொகுப்பாளர், மிமிக்ரி கலைஞர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர் ஆதவன். 'ஆதித்யா' நகைச்சுவை சேனல் தொடங்கப்பட்ட போது அதில் தொகுப்பாளராக வந்து பிரபலமாகத் தொடங்கினார். 'கொஞ்சம் நடிங்க பாஸ்' இவருக்கு ரொம்பவே பெயர் தந்த நிகழ்ச்சி எனச் சொல்லலாம். அதற்கு முன் ரேடியோ தொகுப்பாளராக இருந்து 'ஆதித்யா'வுக்குத் தொகுப்பாளராக வந்தவர் விலாசினி. இவருக்குமே டப்பிங் கலைஞர் என்கிற இன்னொரு அடையாளமும் உண்டு.

'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' 'காக்கிச் சட்டை' ஆகிய படங்களில் நடிகை ச்ரி திவ்யா, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் ரெஜினா, 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தில் நிவேதா பெத்துராஜ் ஆகியோருக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மைத்துனரின் மகளும் கூட‌.

ஆதவன், விலாசினி இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இளையராஜா வி.ஜே. விலாசினி

இருவரையும் அறிந்த சிலரிடம் இது குறித்துக் கேட்ட போது,

'ஆதவனுக்கு வேறோரு பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. விலாசினியும் விவாகரத்து ஆனவங்கதான். ரெண்டு பேருமே தங்களுடைய முதல் திருமண உறவிலிருந்து சட்டபூர்வமா வெளியேறிட்டாங்க.

இந்தச் சூழலில் ஒரே துறையில் இருப்பதால் கலை நிகழ்ச்சிகளின் போது ஒருத்தருக்கொருத்தர் அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைக்க, அதன் தொடர்ச்சியாக ரெண்டு பேருக்குமிடையில் ஒரு புரிதல் உண்டாகி அது திருமண வாழ்க்கையில் சேர்த்து வச்சிருக்கு' என்றார்கள் அவர்கள்.

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!

விஜய் டிவியில் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9.வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொ... மேலும் பார்க்க

BB Tamil 9: `என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணிட்டேன்?"- சண்டைப்போட்ட ரம்யா; அழும் சாண்ட்ரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 94 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 94: பற்றிக்கொண்ட பழைய கதை; உளவியல் போரில் முன்னாள், இந்நாள் போட்டியாளர்கள்! டைட்டில்?

‘சரி.. ஆரம்பிச்சாச்சு.. முடிச்சு வைப்போம்’ என்கிற மாதிரி சோர்வான கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த சீசன்.‘சீக்கிரம் முடிங்கப்பா.. நாங்களும் அடுத்த வேலையைப் பார்க்க போகணும்’ என்கிற மாதிர... மேலும் பார்க்க

`'பராசக்தி' வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி' ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அன... மேலும் பார்க்க

BB 9: "என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?"- விக்ரமைச் சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க