செய்திகள் :

'பணத்திற்காக போரை நிறுத்தியதா இந்தியா, பாகிஸ்தான்' - ட்ரம்பின் கலர் கலர் ரீல்கள்?

post image

கிட்டத்தட்ட 80 - 90 முறை... 'நான் தான்' இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவிட்டார்.

இவரது இந்தக் கூற்றை ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்தும்... மறுத்தும் வருகிறது இந்தியா. ஆனால், 'ட்ரம்ப் தான் போரை நிறுத்தினார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும்' என்று சரணடைந்துவிட்டது பாகிஸ்தான்.

தான் போர் நிறுத்திய கூற்றை மீண்டும் ட்ரம்ப் பேசியிருக்கிறார்.

அவர் சமீபத்தில் அமைதிக்கான குழு ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அதன் நிகழ்வு ஒன்று நேற்று (பிப்ரவரி 19) நடந்துள்ளது. அந்த நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொண்டிருக்கிறார்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

அமைதிக்கான குழு நிகழ்வில் கலந்துகொண்ட ட்ரம்ப் பேசியிருப்பதாவது...

"இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன். இதன் மூலம் 25 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறேன்.

இந்திய பிரதமர் மோடி, ஷெபாஸ் ஷெரீப் இருவரையும் தொலைபேசியில் அழைத்து பேசினேன். அவர்கள் இருவரையும் எனக்கு கொஞ்சம் தெரியும். எனக்கு பிரதமர் மோடியை நன்றாகத் தெரியும்.

நீங்கள் இந்தப் போரை நிறுத்தவில்லை என்றால், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தத்தையும் நான் போடமாட்டேன். இரு நாடுகளின் மீதும் தனித்தனியாக 200 சதவிகித வரி விதிப்பேன் என்று கூறினேன்.

இருதரப்பினருமே சண்டை போட தயாராக இருந்தனர். ஆனால், பணம் என்று வந்துவிட்டால், அது போல எதுவும் இல்லை.

அவர்கள் பணத்தை இழக்க விரும்பவில்லை. அதனால், அவர்கள் சண்டை போட வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டார்கள்.

அவர்களது சண்டையில் மிகவும் மதிப்புள்ள 11 ஜெட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டன" என்று தெரிவித்துள்ளார்.

ஷெபாஸ் ஷெரீப்
ஷெபாஸ் ஷெரீப்

இந்தப் பேச்சின் போது, நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஷெபாஸ் ஷெரீப்பை எழுந்து நிற்க கூறினார் ட்ரம்ப். இது ஷெபாஸ் ஷெரீப்பிற்கு மிகவும் சங்கடமான சூழலாக இருந்தது.

முன்பு, இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது மூலம், 10 மில்லியன் மக்களைக் காப்பாற்றினேன் என்று கூறிய ட்ரம்ப், தற்போது எண்ணிக்கையைக் கூட்டியுள்ளார்.

இரு தொகுதியில் விஜய்; தி.நகரில் ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ்? - தயாரானதா தவெக-வின் முதல் லிஸ்ட்?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சியில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை, திருச்சி தொடங்கி விஜய் போட்டியிடும் தொகுதி என பல ஊர்களின் பெயர்கள் அவ்வ... மேலும் பார்க்க

முதல்வரே பாராட்டிய கோவை திமுக நிர்வாகியின் `பதவி பறிப்பு' - கூண்டுடோடு ராஜினாமா செய்த உடன்பிறப்புகள்

சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுற்ற தொடங்கிவிட்டன. கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருக்க அந்தக் கட்சியின் களப்பணி மட்டும் காரணமல்ல. கோவை திமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்னையும் ம... மேலும் பார்க்க

`ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்' - அரசியலில் அவரின் முக்கிய முடிவை அறிவிப்பாரா?

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். தமிழக சட்டசபையில் கடந்த 17 ஆம் தேதி 2026-2... மேலும் பார்க்க

விஜய்: 'தலைவருக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது, ஏன்னா.!' - தவெக அருண்ராஜ்

தவெக கொள்கை பரப்புப் பிரிவு பொதுச் செயலாளர் அருண்ராஜ் மதுரையில் இன்று (பிப்.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்."ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் கட்சியின் முடிவு. மற்... மேலும் பார்க்க

`அந்த நீண்ட சீட்டும் ஒற்றை முத்திரையும்.!' - வாக்குச்சீட்டும் வாக்காளரின் கையில் இருந்த ஜனநாயகமும்!

வாக்குச்சீட்டும் வாக்காளரின் கையில் இருந்த ஜனநாயகமும்நினைவுச் சுவடுகள் 6தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில், வாக்குச்சீட்டு என்பது ஒருபோதும் சாதாரணமான காகிதமாக இருந்ததில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர... மேலும் பார்க்க