செய்திகள் :

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

post image

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர் விஜயனை திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று மொபைல் போனைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்திலேயே காக்க வைத்ததாக தகவல் வெளியானது.

பத்திரிகையாளர் விஜயன்
பத்திரிகையாளர் விஜயன்

இந்நிலையில் பத்திரிகை சுதந்திரத்தை தவெக அரசு நசுக்கிறது என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தவெக அரசைக் கண்டித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான புதிய தலைமுறையில் பணியாற்றி வரும் அறிவுசார்ந்த நெறியாளர் திரு. விஜயன் அவர்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமலும், விசாரணைக்கு அழைக்காமலும் நள்ளிரவில் கைது செய்து செல்போனைப் பறிமுதல் செய்து அவர் எந்தக் காவல் நிலையத்தில் இருக்கிறார் என்பதைக் கூட தெரியப்படுத்தாமல் அலக்கழித்த சம்பவம் தமிழக காவல்துறைக்கு ஒரு கரும்புள்ளியாகக் கருதப்படுகிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழக காவல்உளவுத்துறை தலைவர், தமிழக முதல்வரைச் சந்திக்க முடியவில்லை என்று புலம்பும் நிலையில், CM சார் காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது உங்களைச் சுற்றி இருக்கும் Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஜனநாயகத்தின் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்க துடிக்கும் தமிழக முதல்வரை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க

'நித்யானந்தாவின் கைலாசாவோடு தவெக அரசு ராஜாங்கரீதியான உறவா?' - விவரம் என்ன?

நிநித்யானந்தாவின் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் தவெக அரசின் அமைச்சர்களை சந்தித்து ராஜாங்கரீதியான உறவுகள் குறித்து விவாதித்ததாக நித்யானந்தா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.நித்யானந்தாஇ... மேலும் பார்க்க