பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!
பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!
2024 ஆண்டின் துவக்கத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் இருக்கும் உரையாடலை வைத்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் புகாரில் முன்னாள் அ.தி.மு.க நிர்வாகியான பரமக்குடி நகராட்சி கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளிக் கடை உரிமையாளர் ராஜா முகமது மற்றும் இடைத் தரகர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் போக்சோ வழக்குப் பதிவு செய்தது. பின்னர் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 பேரை கைது செய்தனர். அதன்பின் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் சிகாமணி, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 3 பேர் மீது ஒரு குற்றப்பத்திரிகை, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 4 பேர் மீது மற்றொரு குற்றப்பத்திரிகை என மொத்தம் இரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமீனை உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிகாமணியை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகவும், 5 மாதத்திற்குள் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகினர். இந்த வழக்கில் 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகினர்.

இந்த வழக்கில் 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட்டது. ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் முதல் வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் இறுதி தீர்ப்பை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரையும் விடுதலை செய்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். பெரிய அளவில் எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பு ஒன்றுமே இல்லாமல் முடிந்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன என விசாரிக்கும் போது இந்த வழக்கில் தொடர்புடைய பெண், சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் இருக்கும் போது வழக்கில் தொடர்புடையவர்களின் பெயர்களை கூறியிருக்கிறார். ஆனால் காவல்துறை விசாரணையின் போதும், வழக்கு விசாரணையின் போதும் அவர்கள் குறித்து பேசவில்லை என கூறப்படுகிறது. மேலும் அந்த ஆடியோவில் பேசியுள்ள பெண் நான் இல்லை எனவும் கூறியுள்ளார். இதனால் குற்றப்பத்திரிகையில் கூட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.


















