செய்திகள் :

பழனி நிலமோசடி விவகாரம்: "அன்வர்தீன் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்"- நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வாதம்

post image

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபால், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், "பழனி அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வை அணுகி, மடத்தை எதிர்மனுதாரராகச் சேர்க்காமல் உண்மை விபரங்களைத் மறைத்து உத்தரவு பெற்று முருகதாஸ் என்பவர் வெள்ளைத்துறை மற்றும் சேதுபதி பெயரில், பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் வழக்கமான பதிவாளர், அலுவலக உதவியாளர், மாவட்ட பதிவாளர், கூடுதல் பொறுப்பு வைத்து ஆவண எண் ஒதுக்கிய பதிவாளர் என அனைத்து அதிகாரிகள் மீதும் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது.

 அன்வர்தீன்
அன்வர்தீன்

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க போதுமான முகாந்திரம் உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க  இடைக்கால தடை விதிப்பதோடு, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, பாதுகாக்கவும், வழக்கை சிபிஐக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்" என வாதிட்டார்.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். வழக்கு உரிய ஆவணங்கள் ஆதாரங்கள் அடிப்படையில்தான் விசாரணை நடைபெற்று கைது நடவடிக்கைகள் நடைபெறுகிறது. மேலும் இதற்கான சதி திட்டம் கடந்த மார்ச் மாதமே தொடங்கியது” என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், பழனி தண்டாயுதபாணி கோவில் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

'நீட் கலந்தாய்வில் தவறாகத் தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு' - உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பிரஜித் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன்னிடம் செல்லுபடியாகும் ஓசிஐ (OCI) அட்டை உள்ளது. நீட் யூஜி 2026 தேர்வில் பங்கேற்று தகுதி பெற்றுள்ளேன். ... மேலும் பார்க்க

'தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா?' - வேதாந்தா நிறுவனத்தின் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணை

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாகக் கூறி 2018-ம் ஆண்டு ஆலைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் 100வது நாளான மே... மேலும் பார்க்க

நீட் போராட்டத்தில் போலீஸாரின் செயல்: `சட்டம் தன் கடமையைச் செய்யும்' - அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது!அமைதியான வழியில் போராடநீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையினர் மிதமிஞ்சிய பலத்தைப் பயன்படுத்தியதாக... மேலும் பார்க்க

கரப்பான் பூச்சி: ``என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது" - தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது.போராட்டம் தீவிரமட... மேலும் பார்க்க

"எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!" - டெல்லி தடியடி வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் பேரணி நடத்தினர். இதனால் கடந்த சில நாள்களாக டெல்லியே ஸ்தம்பித்துப் ப... மேலும் பார்க்க

'கிராம மயானத்தை வேறு உள்ளாட்சியைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாது' - உயர்நீதிமன்றம் உத்தரவு

தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், தவராஜா, ரகுநாதன் ஆகியோர், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.அதில். “எங்கள் கிராமத்தில் இறந்து போனவர்களின் உடல்களை சுக்குவாடன்... மேலும் பார்க்க