kathipara Flyover Metro Bridge : வியக்கவைக்கும் கத்திபாரா மெட்ரோ பாலம் பணிகள்!
``பாஜகவுக்கு சாமரம் வீச அதிமுக SIR-ஐ ஆதரிக்கிறது'' - திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ
"2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்" என திமுக சட்டத்துறைச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ சென்னையில் நேற்று (நவ.18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
" தேர்தல் ஆணையம், ஒரு மாத காலத்துக்குள் பொதுமக்கள் கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும் என்கிறது. முழுக்க முழுக்க பி.எல்.ஓ.க்களை நம்பி செயல்படும் இந்த முறையில், அவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது.
பி.எல்.ஓ.க்கள், மக்களிடம் உள்ள எதிர்ப்பையும், தேர்தல் ஆணையத்தின் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
படிவங்கள் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. இரண்டு படிவங்கள் வர வேண்டிய இடங்களில் ஒரு படிவம் மட்டுமே வந்திருக்கிறது.
இந்த நடவடிக்கையால், பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது, இது தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்குப் பேராபத்து.

அதிமுகவினர், எஸ்ஐஆர்-ஐ வரவேற்றுப் பேசியது, அதில் உள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ளாமல், பாஜகவுக்கு சாமரம் வீச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே. எஸ்ஐஆர் நிறைவேற்றத் தொடங்கிய பிறகே, பொதுமக்களுடைய வாக்குகளைப் பறிக்கக்கூடிய வகையில் இது இருப்பதை அதிமுக தொண்டர்கள் உணர்ந்து தங்கள் கட்சி எடுத்த நிலை தவறு என்று அறிந்திருக்கிறார்கள்.
திமுக எப்போதும் நேர்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும் என்று வலியுறுத்துகிறது. திமுகவினர் மீது அதிமுக விமர்சனம் வைப்பது இயலாமையின் வெளிப்பாடு.
2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்" என்று பேசியிருக்கிறார்.















