BB 9: "ஆரம்பிச்சு விட்டுட்டு எங்க புகையுதுன்னு பார்ப்பாங்க" - பார்வதியை கலாய்த்த...
பாஜக: "விஜய் Spoiler-ஆ? பியூஷ் கோயலிடம் பேசியது என்ன?" - நயினார் நாகேந்திரன் தகவல்
மத்திய அமைச்சரும், பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னைக்கு வந்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம், அதிமுக – பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவது எப்படி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்தச் சந்திப்பில் தமிழ்நாட்டின் கள நிலவரம் எப்படி இருக்கிறது, தேர்தல் கள நிலவரம் எப்படி என்பது குறித்துப் பேசப்பட்டது.

தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இன்னும் தயாராகவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் எப்படி நடந்தது என்பது குறித்து ஆலோசித்தோம்.
தமிழ்நாட்டில் திமுக அகற்றப்பட வேண்டும். ஒருமித்த கருத்துடையவர்கள் ஓரணியில் இணைய வேண்டும். தினகரன், ஓபிஎஸ்ஸை இணைப்பது பற்றியோ, விஜய் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை.
விஜய் ஸ்பாயிலர் என்று எப்படிச் சொல்ல முடியும். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. பொங்கல் முடிந்து கூட நல்ல காரியங்கள் நடக்கலாம். தை பிறந்தால் வழி பிறக்கும் வாய்ப்புள்ளது” என்றார்.















