செய்திகள் :

பிரிந்து சென்ற மனைவி; கட்டிலில் இரு குழந்தைகளுடன் கருகிக் கிடந்த கணவன் - விரக்தியில் விபரீத முடிவு!

post image

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள சிறுப்பாடு- சவேரியார் புரத்தைச் சேர்ந்தவர் மரிய மிக்கேல்.  இவர் மனைவி சபிதா ரோனிகம். இவர்களுக்கு 9-ம் வகுப்பு பயின்று வந்த மரிய நிரோஷா என்ற மகளும், 7-ம் வகுப்பு படித்து வந்த மரிய கெனிஸ்டன் என்ற மகனும் இருந்தனர். மரிய மிக்கேல் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மரிய மிக்கேலின் மனைவி சபிதா ரோனிகம், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.  

புதுக்கோட்டை

இதன் காரணமாக மரிய மிக்கேல் மனம் உடைந்து காணப்பட்டு இருந்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து டிரைவர் வேலைக்குச் செல்லாமல் பெயின்ட் அடிக்கும் வேலைக்குச் சென்று வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற மன வேதனையில் இருந்த மரிய மிக்கேல், நேற்று இரவு தற்கொலை செய்யும் முடிவு எடுத்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு குழந்தைகளுக்கு சிக்கன் ரைஸ் உள்ளிட்ட உணவுகளை வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

பின்னர், குழந்தைகள் இருவரும் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது மரிய மிக்கேல் மின்சார வயரை தனது இரண்டு குழந்தைகளின் கை, கால்களில் கட்டி, தனது உடலிலும் கட்டிக் கொண்டு, மின்சாரத்தைப் பாய்த்து துடிதுடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணி வரை பூட்டப்பட்ட கதவு  திறக்கப்படவில்லை. குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லவில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.  

புதுக்கோட்டை காவல் நிலையம்

போலீஸார் பூட்டப்பட்ட கதவை உடைத்து பார்த்தபோது  வீட்டின் உள்ளே மரிய மிக்கேல் மற்றும் 2 குழந்தைகள் ஆகியோர் கட்டிலில் படுத்திருந்தனர். மூன்று பேரின் உடலிலும் மின்சார வயர்கள் உடலில் கட்டியபடி  வாயிலிருந்து ரத்தம் மற்றும் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மின்சார வயர்களில் மின்சார இணைப்பும் இருந்துள்ளது.

சொத்து தகராறில் காட்டுமிராண்டித்தனம்; வயதான தாயை காலால் எட்டி உதைத்த மகன் - பரவும் அதிர்ச்சி வீடியோ!

திருப்பத்தூர் அருகேயுள்ள விஷமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த பார்வை குறைபாடுடைய மூதாட்டி விஜயலட்சுமி. இவருக்கு கோபி, ஜோதிராஜ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தனது கணவரின் பெயரில் இருந்த நில... மேலும் பார்க்க

அரக்கோணம்: ரயிலில் மது அருந்தி புகைப்பிடித்த போதை ஆசாமிகள் - பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில்கள் மூலம் ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிப... மேலும் பார்க்க

வேறொரு பெண்ணுடன் திருமணம்; விபரீத முடிவெடுத்த காதலி - கூமாபட்டி இளைஞரை சிக்க வைத்த சிசுவின் DNA

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்த சேர்வாரன் என்பவரது மகள் ஈஸ்வரியும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் கடந்த 2019ம் ... மேலும் பார்க்க

Magic Mashroom: பறிபோன காதலியின் உயிர்; அப்போதும் அடங்காத போதை காளான் வெறி! அதிர்ச்சி பின்னணி

மேஜிக் மஷ்ரூம் எனப்படும் போதை காளான்களை நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தேடி அலையும் இளைஞர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதையில் புதுமையைத் தேடுகிறோம் என்கிற பெயரில் ஆபத்து நிறைந்த காடுக... மேலும் பார்க்க

திண்டுக்கல்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி – 3 பேர் மீது வழக்கு பதிவு!

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பீட்டர் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர்களது குடும்ப நண்பரான சென்னைய... மேலும் பார்க்க

சென்னை: நட்சத்திர ஹோட்டலில் இருந்த ரௌடி எண்ணூர் தனசேகரன்; துப்பாக்கி முனையில் கைதுசெய்த போலீஸ் டீம்!

சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். பிரபல ரௌடியான இவர்மீது, ஏழு கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வழக்கு ஒன்றில் கைதான தனசேகரன் கடலூர் மத்தியச் ... மேலும் பார்க்க